Yoga training in all schools Chief Minister speech

சென்னை பல்கலைக்கழகத்தில், ஆசிரியர்கள் பணி ஆணை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எனது தலைமையிலான அரசு தமிழகத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தி வருகிறது என்றார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த 6 வருடங்களில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான முழு நேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களின் மனதில் அமைதியைக் கொடுப்பது கல்விதான். அந்த அமைதியும் அறிவையும் வழங்கும் கல்வியை வழங்குபவர்கள் ஆசிரியர்கள்தான். 

நல்ல குடிமக்களை உருவாக்குவதில் கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் பங்களிப்பு மகத்தானது.
மாணவர்களின் பல்வேறு திறன்களை வளர்க்கும் வகையில் கலைத் திருவிழா நடப்பாண்டு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.