Currently the lifestyle yoga is the most important ranked

தற்போது உள்ள வாழ்க்கை முறையில், யோகா என்பது மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது . இதற்காக சமீபத்தில் கூட யோகா தினம் அறிவிக்கப்பட்டு, அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக பாரத பிரதமர் மோடி அவர்களும் யோகா செய்ததை பார்க்க முடிந்தது .

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கூட யோகா கொண்டு வரப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

உடற்திறன் மற்றும் மனத்திறன்

மாணவர்களின் உடல் வலிமை மற்றும் மன வலிமையை அதிகரிக்கும் பொருட்டு , இனி வரும் காலங்களில் தமிழக அரசு பள்ளிகளில் யோகா கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாக , பள்ளி கல்வித்துறையின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார் . இதற்கான அரசானை மிக விரைவில் வெளியிட படும் எனவும் அவர் தெரிவித்தார் .