சொத்து குவிப்பு வழக்கில் நேற்று சசிகலா , பெங்களூரு ஆக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டர். அவருடன் இளவரசி மற்றும் சுதாகரன் உள்ளிட்டோரும் சிறையில் அடைக்கப் பட்டனர்.

இரண்டு பெண்கள் :

சசிகலா தங்கியுள்ள அறையில், அவருடன் 2 கைதிகள் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.மேலும் நேற்று சசிகலா அதிக தூரம் காரில் பயணம் செய்ததால், மிகவும் சோர்வாக காணப்பட்டதாக தெரிகிறது.மேலும் ரத்த அழுத்தம் சிறிது அதிகரித்து காணப்பட்டதாக ,, மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

சிறையில் என்ன சாப்பிட்டார்

சிறைக்கு சென்ற சசிகலா நேற்று இரவு சாம்பார் சாதம் மற்றும் தன்னுடன் கொண்டு வந்திருந்த பழங்களையும் சாப்பிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர் எப்பொழுதும் சாப்பிடும் மாத்திரை மற்றும் டானிக் எடுத்துக்கொண்டுள்ளார்.

ஆவணங்களில் கையொப்பம்

நீதிமன்றம் வழங்கும் பல்வேறு ஆவணங்களில், சசிகலா கையெழுத்து போட வேண்டிய நிலையில் இருப்பதால், அனைத்தையும் நிதானமாக படித்து விட்டு, பின்பு கையெழுத்து போடுகிறாராம் சசிகலா .