நேற்று இரவே விரலில் மை வைத்து கதையை முடிச்சிட்டாங்களாமே..! உத்திர பிரதேசத்தில் பரபரப்பு..!

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள சந்தாலி என்ற மக்களவைத் தொகுதியில் அந்த ஊர் கிராம மக்களுக்கு நேற்றே கையில் மை  வைக்கப்பட்டு உள்ளதகாக சர்ச்சை கிளம்பி உள்ளது 

இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி உட்பட எட்டு மாநிலங்களில் ஏழாம் கட்டமாக நடந்து வரும் தேத்தலில் இன்றுடன் வாக்கு பதிவு நிறைவு பெறுகிறது.அதன்படி 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று மாலையுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

அதன் படி, இன்று காலை முதலே 7 மணி முதலே தொடர்ந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர். இதற்கிடையில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான கடைசி வாக்களிக்கும் நாளாக இருந்தாலும் நேற்று இரவே உத்திரபிரதேச மாநிலத்தின் குறிப்பிட்ட நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று இரவே கையில் மை வைக்கப்பட்டு உள்ளதாக எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.