உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று நடந்த பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தத் தகவலை ட்விட்டர் மூலம் தெரிவித்த அமித் ஷா, உடல் நிலை சீராக உள்ளது என்றும், கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படியும் அமித் ஷா ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இதேபோல தமிழக ஆளுநர் பன்வாரிலாலுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து ஆளுநர் மாளிகையிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக பன்வாரிலால் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதேந்திர சிங்கிற்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

