Yediyurappa sworn again as cm of karnataka
கர்நாடக தேர்தலில் 119 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி தனிப் பெரும்பான்மை கட்சியாக பாஜக உருவெடுத்த நிலையில் எடியூரப்பா அங்கு மீண்டும் முதலமைச்சராகிறார். ஏற்கனவே அவர் சொன்னபடி நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை முதல் துவங்கி நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாரதீய ஜனதா 119 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. . தற்போது தேவையான 113 க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. இதையடுத்து மீண்டும் கர்நாடகா முதலமைச்சராகிறார் எடியூரப்பா.
இந்த வெற்றியை அடுத்து தனது இல்லத்தில் வழிபாடு நடத்திய பா.ஜ.க முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா நிருபர்களிடம் பேசினார். அப்போது வரம 17-ம் தேதி பதவியேற்பு விழா நடக்கும் என்று தெரிவித்தார்.
பாஜக முதலமைச்சராக நாளை எடியூரப்பா பதவியேற்பு விழாவுக்காக கன்டீராவா ஸ்டேடியத்தை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
