Asianet News TamilAsianet News Tamil

தமிழைக் கொலை செய்த குஜராத் அரசு…. பட்டேல் சிலையில் வஞ்சிக்கப்பட்ட தமிழ் மொழி !!

உலகின் மிக உயரமான வல்லபாய் பட்டேலின் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள  கல்வெட்டில் தமிழ் மொழி பெயர்ப்பு தவறாக வைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


 

wrong translation in tamil in patel statute
Author
Narmada, First Published Oct 31, 2018, 11:01 AM IST

இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலை குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் குறுக்கே மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரமான இந்த சிலை உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் இந்த சிலைக்கு ‘ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி’ அதாவது ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டுள்ளது.

wrong translation in tamil in patel statute

இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்நிலையில். இந்த சிலைக்கு கீழே பல்வேறு மொழிகளில் ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி என்ற சிலையின் பெயர் மொழிப்பெயர்க்கப்பட்டு இருந்தது. அந்த வரிசையில் தமிழ் மொழியின் மொழிப்பெயர்ப்பு மிகவும் மோசமாக இருப்பதால் சர்ச்சையாகி உள்ளது.

wrong translation in tamil in patel statute

ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி என்ற ஆங்கில வார்த்தையை கூகுளில் மொழிப்பெயர்ப்பு செய்து இருந்தால் கூட ஒற்றுமையின் சிலை என வந்திருக்கும் ஆனால், ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என மொழிப்பெயர்த்து இருக்கிறார்கள். இதற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது

wrong translation in tamil in patel statute

இதையடுத்து, தமிழ் மொழிப்பெயர்ப்பின் மீது வண்ணம் பூசி அதை தற்காலிகமாக மறைத்து உள்ளனர். இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்ட உலகின் மிக உயரமான சிலையில் தமிழ் மொழியின் மொழிப்பெயர்ப்பு மோசமான நிலையில் இருப்பது, தமிழை வஞ்சிக்கும் பார்வையை வெளிப்படுத்துவதாக உள்ளது என பரவலாக பேச்சு எழுந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios