சாரு நிவேதிதா என்பதற்கு தமிழ் அகராதியை எடுத்துப் பார்த்தால் ‘சர்ச்சை மன்னன்’ என்றிருக்கலாம். அந்தளவுக்கு தன் பர்ஷனல் வாழ்க்கை பக்கங்களில் துவங்கி செலிபிரெட்டிகள் வரை எல்லாவற்றையும் சர்ச்சை கோணத்தில் அலசி தொங்கவிடுவது இவரது ஸ்டைல். அது சில நாட்கள் பற்றிக் கொண்டு எரியும். 

’யுத்தம் செய்’ படத்தின் ஒரு பாடலில் மிஷ்கின் இவரை நடிக்க வைத்திருந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் சாருவை வெச்சு செய்த மிஷ்கின், எடிட்டிங்கில் வெட்டி தள்ளிவிட்டார். படம் ரிலீஸானபோது அதை பார்த்த சாரு நொந்து வெந்து, மிஷ்கினுக்கு எதிராக பொங்கி வழிந்துவிட்டார். 
அப்படியான சாரு இப்போது விட்டு விளாசியிருப்பது யாரை தெரியுமோ? ஏ.ஆர்.ரஹ்மானை. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தன் சமூக வலைதள பக்கம் ஒன்றில் சாரு எழுதியிருப்பது இதுதான்...

“செக்க சிவந்த வானம் பூமி பூமி பாடலை அனுப்பியிருந்தார் நண்பர். இசை ஏ.ஆர்.ரஹ்மானாம். படு கேவலமாக இருந்தது. பாட்டா இது? ரஹ்மான் இந்திப்படங்களுக்கு ஒரு மாதிரியும், தமிழ்ப் படங்களுக்கு பீச்சாங்கையாலும் போடுகிறார். இது பீச்சாங்கையால் கூடப் போடவில்லை. காலால் எத்திவிட்டிருக்கிறார். நான் பாட்டுக்கு ஏதோ வேலை செய்து கொண்டிருக்கிறேன். ஏன் ஐயா இந்த கருமாந்திரத்தையெல்லாம் அனுப்பி திட்டு வாங்கிக் கொடுக்கிறீர்கள்?” என்பதுதான். 

சாருவின் இந்த செருப்படி நிகர் வரிகள் இண்டஸ்ட்ரியை ரெண்டு மூன்று நாட்களாக கலக்கிக் கொண்டிருக்கின்றன. எப்படி ரஹ்மானை சாரு இப்படி அசிங்கப்படுத்தலாம்? பிரபலமாவதற்காகவே சர்ச்சை கருத்துக்களை சொல்வது சாருவின் பிறவி குணம், ஆனால் அதை இசைப்புயலிடமுமா காட்ட வேண்டும்?.. என்று கிழித்தெடுத்திருக்கின்றனர். 

இன்னும் சிலரோ ‘இது அந்த படத்துக்கு ஒருவகை விளம்பரம் தான் ப்ரோ. எல்லாம் இங்கே டிராமாதான்’ என்கிறார்கள். கட்ட கடைசியில் ரசிகன் தான் லூசு போல!