செல்வ வளத்தை பெருக்கும் பெருமாள் வழிபாடு.. புரட்டாசி சனிக்கிழமை விரதம் எப்படி இருக்க வேண்டும்?

தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி உள்ள நிலையில், புரட்டாசி சனிக்கிழமையின் முக்கியத்துவம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Worship of Perumal which increases wealth.. Purattasi sanikilamai viratham in tamil viratha murai Rya

புரட்டாசி என்பது தமிழ் மாதங்களில் 6-வது மாதமாகும். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. எனவே பெருமாளை வணங்குவோர் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, சனிக்கிழமை தோறும் விரதம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி உள்ள நிலையில், புரட்டாசி சனிக்கிழமையின் முக்கியத்துவம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி என்பது சூரியன் புதனால் ஆளப்படும் கன்னி ராசியில் இருக்கும் மாதம். புதனின் அதிபதி விஷ்ணு, செல்வத்தின் கடவுள். எனவே, புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவதால் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.

விஷ்ணு பகவான் இந்த புரட்டாசி மாதத்தில் வெங்கடேஸ்வரராக மனித உருவில் திருப்பதி மலையில் பூமி விமானத்தில் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. மேலும், இந்த மாதத்தில் சனி பகவானின் சக்தி குறைவாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. எனவே, சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதால், பெருமாளின் அருளும் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் சனிக்கிழமை விரதம் சனி பகவானின் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது.

புரட்டாசி சனிக்கிழமை விரதம்

பெருமாள் பக்தர்களுக்கு அனைத்து சனிக்கிழமைகளுமே சிறப்பு தான். அதிலும், புரட்டாசி சனிக்கிழமை என்றால் கூடுதல் சிறப்பு. புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் விரதத்தை கடைபிடிக்கிறார்கள். இன்னும் சிலர் மாதம் முழுவதும் விரதத்தை கடைபிடிக்கிறார்கள், பலர் அனைத்து சனிக்கிழமைகளிலும் கடுமையான விரதத்தை பின்பற்றுகிறார்கள். அசைவ உணவு, புகைபிடித்தல், மது அருந்துவதை தவிர்த்து பெருமாள் பக்தர்கள் சைவ உணவுகளையே உண்கின்றனர்.

மேலும் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையில் பெருமாளுக்கு நைவேத்தியம் படைக்க வேண்டும். வாழை இலையில், புளி சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வடை, சுண்டல், பாயாசம் வைத்து படைக்கலாம். பெருமாளுக்கு வடை மாலை சாற்றினால் கூடுதல் சிறப்பு. மேலும் துளசி தீர்த்தம் பூஜையில் கட்டாயம் இருக்க வேண்டும். மாவிளக்கு போட்டு, வழக்கம் போல் தேங்காய் பழம் உடைத்து பூஜை செய்து காக்கைக்கு உணவு வைக்க வேண்டும். எமகண்டத்திற்குள் இந்த பூஜையை முடிக்க வேண்டும்.. பின்னர் வீட்டில் இருப்பவர்கள் உணவருந்தலாம், முடிந்தால் அருகில் இருப்பவர்களை அழைத்து சாப்பாடு போடலாம். பூஜையை முடித்து கண்டிப்பாக பெருமாள் கோயிலுக்கு செல்ல வேண்டும். 

புரட்டாசி சனிக்கிழமை விரதம் கடைப்பிடிப்பதன் பலன்கள்

நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்கும்
சனியின் எதிர்மறை விளைவுகளை குறையும்
ஒட்டுமொத்த நல்வாழ்வு, செழிப்பு மற்றும் ஆன்மீக வளர்ச்சி அதிகரிக்கும்
ஆசைகளை நிறைவேறும்
மோட்சத்தை (முக்தி) அடைய உதவுகிறது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios