என்னை செருப்பால் அடிப்பதால் ஒரு லட்சம் கிடைக்கும் என்றால், அந்த வாய்ப்பை ஏழை மாணவர்களுக்கு வழங்க தயார் என சூர்யா பதிலடி கொடுத்துள்ளார்.
என்னை செருப்பால் அடிப்பதால் ஒரு லட்சம் கிடைக்கும் என்றால், அந்த வாய்ப்பை ஏழை மாணவர்களுக்கு வழங்க தயார் என சூர்யா பதிலடி கொடுத்துள்ளார்.

நீட் தேர்வால் தங்களது உயிர்களை இழக்கும் மாணவர்களுக்கு ஆதரவாக நடிகர் சூர்யா தனது குரலை எழுப்பினார். அந்த கருத்தை பல அரசியல் வாதிகள் எதிர்த்தனர். அந்த வகையில் இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அர்ஜுன் சம்பத் " நீட் தேர்வு விவகாரத்தில் சூர்யா நீதிமன்றத்தை அவமதித்து பேசியுள்ளார். சூர்யாவை செருப்பால் அடிப்பவருக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என கூறினார். இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் " என்னை செருப்பால் அடிப்பதால் ஒரு லட்சம் கிடைக்கும் என்றால், அந்த வாய்ப்பை ஏழை மாணவர்களுக்கு வழங்க தயார் " என கூறியுள்ளார் சூர்யா.
இது தான் அந்த கேவலமான பேச்சுக்கு சரியான பதிலடி என சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் நடிகர் சூர்யா மீது செருப்பால் அடித்தால் பணம் தருவதாக தான் கூறவில்லை என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மறுப்பு தெரிவித்துள்ளார்.
