world nurses day celebration in chennai

சென்னையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது அதன்படி அரசு மருத்துவமனையில் பணிசெய்யும் செவிலியர்களை பாராட்டும் விதமாக முதன் முறையாக 251 செவிலியர்களுக்கு சேவை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

விருது வழங்கும்முறை இனிவரும் வருடங்களில் உலக செவிலியர் தினத்தை ஒட்டி நடைபெறும் என அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

செவிலியர் அமைப்பு நீண்ட காலமாக சீருடையில் மாற்றம் செய்ய வேண்டி கேட்டுள்ள கோரிக்கை அரசு ஏற்று அதை பரிசிலீக்கிறது அதன்படி தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., உமாமகேஸ்வரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விரைவில் செவிலியர் சீருடை மாற்றப்படும் என அறிவித்துள்ளார், இதற்கு முதல்வரும் அனுமதி வழங்கியுள்ளார் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதிதாக பணியிலமர்த்திய பத்தாயிரம் செவிலியர்கள் படிப்படியாக நிரந்தரமாக்கப்படுவார்கள். பணி நிரந்தரம் பண்ணப்பட்ட செவிலியர்கள் அடுத்தடுத்த உயர்பதவிகளை பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இடமாறுதல் கலந்தாய்வு விரைவில் ஆன்லைனில் நடத்தப்படும் என அவர் கூறினார்.