ஒரே ஒரு ஹிட் படம் மட்டும் கொடுத்துவிட்டு பேசிப் பேசியே பிரபலமான இயக்குனரால் திமுக இளைஞர் அணிச் செயலாளரின் அந்தரங்க விஷயங்கள் திரையுலகில் கசிந்து வருவதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.

15 வருடங்களுக்கு முன்பு இவர் இயக்கிய ஒரு திரைப்படம் விமர்சன ரீதியில் நல்ல பாராட்டுகளை பெற்றது. படமும் குடும்பத்தோடு பார்க்கும் வகையில் இருந்தது. ஆனால் அதன் பிறகு இந்த இயக்குனர் இயக்கிய படங்கள் அனைத்தும் படு தோல்வி. ஆனால் இயக்குனர் வாய்த் திறமை மிக்கவர். பட விழாக்கள், பட்டிமன்றங்கள், டிவி நிகழ்ச்சிகளில் இவரது பேச்சுகள் கவனம் பெற்றன. சமூகம் சார்ந்த இந்த இயக்குனரின் பேச்சுகள் சமூக வலைதளங்களிலும் பேசு பொருள் ஆனது. பிறகு பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் அரசியல் ஆசையில் உள்ள நடிகர்களுக்கு பேசுவதற்கான ஸ்க்ரிப்ட் தயாரிக்கும் பணியில் இவர் ஈடுபட்டு வந்தார்.

பிறகு ஒரு சில இயக்குனர்களிடம் மீண்டும் உதவி இயக்குனராக பணியாற்றினார். இந்த நிலையில் தான் நடிகர் ரஜினி அரசியலுக்கு வர உள்ளதா அறிவித்தார். அப்போது இந்த இயக்குனர் வெளியிட்ட வீடியோ வைரல் ஆனது. ரஜினி எதிர்ப்பாளர்களுக்கு இயக்குனரின் இந்த வீடியோ வரப்பிரசாதம் போல் அமைந்தது. அன்று முதல் தொடர்ந்து ரஜினி எதிர்ப்பு வீடியோக்களை இயக்குனர் வெளியிட ஆரம்பித்தார். அப்போது ரஜினி எதிர்ப்பை ஆயுதமாக கையில் எடுத்த திமுகவிற்கு இந்த இயக்குனர் மீது பார்வை விழுந்தது.

இதன் பிறகு உதயநிதியுடன் இயக்குனருக்கு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. திரைப்படம் பண்ணலாம் என்று தான் இயக்குனர் உதயநிதியை அணுகினார். ஆனால் அவரது பேச்சுத்திறன், அரசியல் பார்வை போன்றவை உதயநிதியை கவர்ந்தது. இதனை அடுத்து உதயநிதி தனது அரசியல் வியூகங்களுக்கு எழுத்து வடிவம் கொடுக்கும் பணியை இந்த இயக்குனரிடம் கொடுத்தார். இதற்காகவே காத்திருந்த இயக்குனர் நக்கல், நய்யாண்டியுடன் எழுதிக் கொடுத்த விஷயங்கள் உதயநிதியின் சமூக வலைதளப்பக்கங்களை ஆக்கிரமித்தது. 

இதற்கிடையே இயக்குனர் ரொம்ப பிடித்துப்போக, உதயநிதி அவரை வைத்து அரசியல் ரீதியிலான ஒரு நிகழ்ச்சியை சமூக வலைதளங்களில் ஏற்பாடு செய்து அதனையும் நடத்தி வருகிறார். இப்படி எல்லாம் நன்றாக சென்று கொண்டிருப்பதாக உதயநிதி நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இயக்குனர் எந்த அளவிற்கு வில்லங்கம் பிடித்தவர் என்பது அவரது திரையுலக நண்பர்களுக்குத் தான் தெரியும். இயக்குனர் சரக்கு போட்டுவிட்டால் என்ன பேசுவார் என்றே தெரியாது. திரையுலகில் இவருக்கு நண்பர்கள் குறைந்த அளவில் இருக்க காரணமே இவரது பேச்சுகள் தான்.

சரக்கு போட்டுவிட்டால்  கிசுகிசு பேசுவது இந்த இயக்குனருக்கு மிகவும் பிடிக்குமாம். அதனால் சரக்கடித்துவிட்டு தன்னுடைய சில நண்பர்களிடம் மற்ற நண்பர்கள் பற்றி கிசுகிசு பேசுவது அவர்களது அந்தரங்க விஷயங்களை ஷேர் செய்வது இயக்குனரை வில்லங்கமிக்க நபராக்கியது. இதனால் நண்பர்கள் பலர் இயக்குனரை பார்த்தாலே தலை தெறிக்க ஓட ஆரம்பித்தனர். இதற்கிடையே இதே பாணியில் தற்போது உதயநிதி ஸ்டாலின் குறித்து இயக்குனர் தன்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் கிசுகிசுக்களை கூறுவதாக சொல்கிறார்கள்.

அதோடு அல்லாமல் உதயநிதியின் அந்தரங்க விஷயங்களையும் கூறி இயக்குனர் சிரித்து வருவதாக கூறுகிறார்கள். அதோடு மட்டும் அல்லாமல் உதயநிதி தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவார் என்றும் வெற்றி பெற்றால் அடுத்த ஆட்சியில் அமைச்சர் கூட ஆகிவிடுவேன் என்கிற ரீதியில் இயக்குனர் போதையில் உளறுவதாக சொல்கிறார்கள். இயக்குனர் உளறும் தகவல்கள் எல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம் என்பதால் அதனை லட்டு போல் சில சினிமா பிரபலங்கள் பத்திரிகையாளர்களுக்கு சுடச்சுட பாஸ் செய்கிறார்களாம். இயக்குனருக்கு உதயநிதி கடிவாளம் போடவில்லை என்றால் மேலும் பல ரகசியங்கள் அம்பலமாகும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறி சிரிக்கிறார்கள் உதயநிதியின் சினிமா வட்டாரங்கள்.