வென்றது தர்மயுத்தம்...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்ததையடுத்து, முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் 6 மாத தர்ம யுத்தத்திற்கு பிறகு அங்கு கால் பதித்தார்

6 மாதத்திற்கு பின் அதிமுக  தலைமை அலுவலகம் வந்த ஒபிஎஸ்  அவர்களை  அமைச்சர்கள்  உற்சாகமாக வரவேற்றனர். கடந்த  6 மாதமாக  தன்னுடைய  கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தர்மயுத்தத்தை நடத்தி  வந்த  ஓபிஎஸ் – க்கு இன்று தான் அவருடைய  தர்மயுத்தம் முடிந்தது .

மலர்ந்தது ஓபிஎஸ் 

இரண்டு அணிகளும் ஒன்று சேர்ந்தன. கடந்த 6 மாத காலமாக எதிரணியாக இருந்த  ஓபிஎஸ் அணி ,இப்போது  ஓரணியாக மாறியது. அணிகள் இணைப்பை  உறுதிபடுத்தும் விதமாக  முதலில் தன்னுடைய உரையை தொடங்கினார்  ஓபிஎஸ்.பின்னர் இபிஎஸ் பேசினார். இதிலிருந்து  ஓபிஎஸ்  அவர்களின் தர்மயுத்தம் வென்றது, அவருடைய முகமும் மலர்ந்தது