ரஜினிகாந்த் தொடங்கவுள்ள கட்சியின் வேட்பாளருக்குதான் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று நாகப்பட்டிணம் மகளிர் சுய உதவிக் குழுவினர் வீடுவீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாகப்பட்டிணம் அக்கரைக்குளம் பகுதியில்  மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் ஒன்று கூடினர்.அப்போது ரஜினிகாந்து ஆரம்பிக்க போகும் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஓட்டு போடச் சொல்லி பெண்கள் மத்தியில் வீடுவீடாக பிரச்சம் செய்வதாக முடிவெடுத்தனர்.அதன்படி மருந்து கொத்தளத் தெரு, கோட்டை வாசல்படி, கீரைக்கொல்லைத் தெரு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு வீடுவீடாகச் சென்ற அவர்கள், ரஜினிகாந்த் விரைவில் தொடங்கவுள்ள கட்சியின் வேட்பாளருக்கே வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே மகளிர் சுய உதவிக் குழுவினர்  வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்தது நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரும் குழப்பத்தில் இருக்கும் ரஜினிகாந்த் கட்சியா? ஆன்மீகமா? என்கிற குழப்பத்தில் இருக்கிறார். பாஜக ஒருபக்கம் ரஜினியை ஆதரவாவது கொடுங்கள் என்கிறது. பெரும்பாலனவர்கள் உங்கள் புகழோடு இப்படியே மெயிண்டேயின் பண்ணுங்க. அரசியல் வேண்டாம் என்கிறார்கள். பலர் ரஜினியை உசுப்பேத்திக்கொண்டிருக்கிறார்கள்.எனவே என்ன செய்வது என்கிற குழப்பத்தில் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார் ரஜினி. இந்த வேளையில் பெண்கள் பிரச்சாரம் என்பது அவருக்கு மகிழ்ச்சியே..!