கடந்த ஒரு வாரமாக தீவிர பிரசாரம் செய்துவரும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை வாழ்த்தி செல்லும் இடமெல்லாம், பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்கின்றனர்.

கடந்த அரவக்குறிச்சி தேர்தலி பணம் கொடுக்கப்பட்டதாக நிறுத்தப்பட்டு மீண்டும் நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிப்பெற்ற செந்தில்பாலாஜி தான் தற்போது திமுக சார்பில் வேட்பாளராகியிருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகள் கரூர் அதிமுகவை தன கைக்குள்ளேயே வைத்திருந்ததென்றால் அது செந்தில்பாலாஜி தான். தம்பிதுரையை ஜெயிக்கவைத்தது முதற்கொண்டு எல்லாமேவாக இருந்த அவர்,  தினகரன் அணியுடன் இணைந்து, கடைசியில் திமுகவில் இணைத்து தற்போது கரூர் மாவட்ட பொறுப்பாளராகி இருக்கிறார்.  திமுகவில் சேந்த செந்தில் பாலாஜியின்  இந்த அசுர வளர்ச்சி திமுகவினரையே அசர வைத்தது. இதனைத் தொடர்ந்து அவர் நடத்தும் ஒவ்வொரு கூட்டமும், அதிமுக மட்டுமல்ல திமுகவின் முக்கிய புள்ளிகளை கதிகலங்க வைத்ததென்றே சொல்லலாம். செந்தில்பாலாஜியின் சமீபத்திய செயல்பாடுகள் தலைமையை மகிழ்வித்திருக்கிறது.
வேட்பாளரானதும் கடந்த ஒரு வாரமாக அனல் பறக்கும் பிரசாரம் செய்து வரும் செந்தில் பாலாஜிக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பான வரவேற்பளிக்கப்படுகிறது.

இன்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர் ஒன்றியம் நொய்யல், திருக்காடுதுரை, புகலூர் தவிட்டுபாளையம், கட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செந்தில்பாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை வாழ்த்தி திலகமிட்டனர். செந்தில் பாலாஜி செல்லும் இடமெல்லாம், ஆரத்தி எடுக்கும் பெண்களும், சரவெடி பட்டாசுகள் என போகும் இடமெல்லாம் பலத்த வரவேற்பளிக்கிறார்கள்.