Asianet News TamilAsianet News Tamil

புருஷன் கால் எடுத்து வெளியே வைக்காம மனைவி பாத்துக்கணும்... ட்வீட் போட்டு மாஸ் காட்டும் ராமதாஸ்..!

ஆக்கும் சக்தியும், காக்கும் சக்தியும் பெண்கள்தான்.  கொரோனா பரவலைத் தடுப்பதற்கான ஊரடங்கு ஆணையை வீட்டு அளவில் செயல்படுத்தும் கடமையும், பொறுப்பும் இல்லத்தரசிகளுக்கு உண்டு. அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றி வீட்டையும், நாட்டையும் காக்க வேண்டும்!

women to take precautions...pmk ramadoss
Author
Chennai, First Published Mar 25, 2020, 5:11 PM IST

கொரோனாவை விரட்டும் சக்தி பெண்கள்தான் எனவும், குடும்பத் தலைவரும், குழந்தைகளும் வீட்டு வாசலைவிட்டு வெளியே கால்களை எடுத்து வைக்க குடும்பத் தலைவிகள் அனுமதிக்கக் கூடாது எனவும், பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,887-ஆக அதிகரித்துள்ளது. 185- க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,21,413-ஆக அதிகரித்துள்ள நிலையில், கொரோனா பதிப்பில் இருந்து 1,08,388 பேர் குணமடைந்துள்ளனர். 

women to take precautions...pmk ramadoss

மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 536-லிருந்து 562 -ஆக அதிகரித்துள்ளது. இதில் இந்தியர்கள் 519 பேருக்கும், வெளிநாட்டினர் 43 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக, ராமதாஸ் இன்று  தன் ட்விட்டர் பக்கத்தில், "ஆக்கும் சக்தியும், காக்கும் சக்தியும் பெண்கள்தான்.  கொரோனா பரவலைத் தடுப்பதற்கான ஊரடங்கு ஆணையை வீட்டு அளவில் செயல்படுத்தும் கடமையும், பொறுப்பும் இல்லத்தரசிகளுக்கு உண்டு. அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றி வீட்டையும், நாட்டையும் காக்க வேண்டும்!

குடும்பத் தலைவரும், குழந்தைகளும் வீட்டு வாசலை விட்டு வெளியே கால்களை எடுத்துவைக்க குடும்பத் தலைவிகள் அனுமதிக்கக் கூடாது. வெளியில் சென்றால்  கொரோனா நோயைக் கொள்முதல் செய்யப் போகிறீர்களா?' என்று எச்சரித்து தடுத்து நிறுத்த வேண்டும்.  கொரோனாவை விரட்டும் சக்தி பெண்கள்தான்!

women to take precautions...pmk ramadoss

பொதுவெளியில் ஊரடங்கு ஆணையை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது காவல் துறையினரால் மட்டுமே சாத்தியமாகும். அவர்களின் பணி மிகவும் சிறப்பானது. வீடுகளை விட்டு எவரும் வெளியில் வராமலிருப்பதை உறுதி செய்யும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; மக்களைக் காக்க வேண்டும்" என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios