Asianet News TamilAsianet News Tamil

வாஷிங் மெஷின், பஸ் டிக்கெட், மகளிர் பேங்க் - அசத்திய அதிமுக தேர்தல் அறிக்கை, பெண்கள் ராயல் சல்யூட்

தமிழகத்தில் பெண்கள் நலனை மையப்படுத்தி அ.தி.மு. தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அம்மா வாஷிங் மெஷின், குலவிளக்கு திட்டம், பேருந்து பயணத்தில் 50% கட்டண சலுகை, சீர்வரிசை திட்டம் போன்ற பல்வேறு பெண்கள் நல திட்டங்கள் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது  பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

women royal salute to admk for lot of welfare schemes to women in election manifesto
Author
Chennai, First Published Mar 15, 2021, 7:24 PM IST

தமிழகத்தில் பெண்கள் நலனை மையப்படுத்தி அ.தி.மு. தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அம்மா வாஷிங் மெஷின், குலவிளக்கு திட்டம், பேருந்து பயணத்தில் 50% கட்டண சலுகை, சீர்வரிசை திட்டம் போன்ற பல்வேறு பெண்கள் நல திட்டங்கள் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது  பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, குடும்ப தலைவிகளின் சுமையை பெருமளவு குறைத்திடும் வகையில் மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை தந்து உதவினார். அம்மா கொடுத்த மிக்ஸி, கிரைண்டர்களை அனைத்து  குடும்ப தலைவிகளும் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக அ.தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

அம்மா வாஷிங்க் மெஷின், பேருந்து பயணங்களில் மகளிர்க்கு 50% கட்டண சலுகை, குல விளக்கு திட்டத்தின் மூலம் மாதந்தோறும் 1500 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும். பெண் அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலம்  ஒரு வருட காலமாக உயர்த்தப்படும். மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் வழங்க தனியாக மகளிர் வங்கி. அரசு வேலையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40%மாக உயர்த்தப்படும். திருமண உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும், புதுமண தம்பதிகளுக்கு அம்மா சீர்வரிசை திட்டம் மூலம் பட்டாடை, வெள்ளிக் கொலுசு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை பெண்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவிக்கின்றனர். அம்மா வாஷிங் மெஷின், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தனி மகளிர் வங்கி, அம்மா சீர் வரிசை, பேருந்து பயணத்தில் கட்டண சலுகை ஆகியவை தங்களுக்கு அத்தியாவசிய தேவை என்றும் அதனை நிறைவேற்றி தருவதாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது மகழ்ச்சி அளிப்பதாகவும் அனைத்து தரப்பு பெண்களும் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios