Asianet News TamilAsianet News Tamil

மாஸ் காட்டும் இபிஎஸ்.. அதிமுகவில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு மாவட்ட செயலாளர் பதவி.! யார் இந்த ஜெயசுதா?

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 25ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 

woman as post of district secretary for first time...edappadi Palanisamy tvk
Author
First Published Sep 28, 2023, 7:43 AM IST

அதிமுகவில் முதல் முறையாக மாவட்ட செயலாளராக பெண் ஒருவரை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 25ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 

இதையும் படிங்க;- விசிகவை நெருங்கும் அதிமுக? ஹலோ அண்ணே.. திருமாவுக்கு போன் போட்டு பாசத்தோடு நலம் விசாரித்த இபிஎஸ்..!

woman as post of district secretary for first time...edappadi Palanisamy tvk

அப்போது அதிமுகவுக்குள் அமைப்பு ரீதியாக மாற்றங்களை மேற்கொள்ளவும், மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டிருந்தார். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் 5 மாவட்டச் செயலாளர்கள் சென்ற நிலையில், அவர்களுக்கு பதிலாக புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க;-  திமுகவுடன் கூட்டணி விரிசலா? அதிமுகவுடன் இணைகிறதா விசிக? வன்னி அரசு சொன்ன பரபரப்பு தகவல்!

woman as post of district secretary for first time...edappadi Palanisamy tvk

திருச்சி மாவட்டச் செயலாளராக முன்னாள் துணை மேயர் சீனிவாசன், பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ இளம்பை ரா. தமிழ்ச்செல்வன்,  குமரி மாவட்டச் செயலாளராக தளவாய் சுந்தரம், தேனி மேற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ ஜக்கையன், திருவண்ணாமலை போளூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எல்.ஜெயசுதா, திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவில் முதல் முறையாக பெண் மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜெயலலிதா இருந்த போது போளூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.  அமைப்பு ரீதியாக அதிமுகவின் மாவட்டங்கள் 75-ல் லிருந்து 82 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Follow Us:
Download App:
  • android
  • ios