யாரும் அச்சப்பட தேவையில்லை.. டெல்டா பிளஸ் கொரோனா பாதித்த பெண் குணமடைந்தார்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!
டெல்டா பிளஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த பெண் தொற்று பாதிப்பல் இருந்து குணமடைந்துள்ளார் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
டெல்டா பிளஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த பெண் தொற்று பாதிப்பல் இருந்து குணமடைந்துள்ளார் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கவியரசு கண்ணதாசனின் 95வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள், மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, ரகுபதி, பெரிய கருப்பண் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த செவிலியர் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தொடர் சிகிச்சை பிறகு நலம் பெற்று பணிக்கு திரும்பி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த செவிலியருடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு பரிசோதனையில் நெகடிவ் வந்திருப்பதாக கூறினார்.
எனவே டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் தெரிவித்தார். விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் தொடர்வதாகவும், வெளிநாட்டு விமான சேவைகள் தொடங்கினால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்தார்.