48 மணி நேரத்தில் மனம் இப்படியும் மாறுமா ஒபிஎஸ்.....? கம்பீர கேள்வி எழுப்பிய சசிகலா....!!!

எம்எல் ஏக்கள் கூட்டம் :

இன்று காலை நடைப்பெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய , அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா , பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பல்வேறு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் . அதன்படி,

அதிமுக பொதுசெயலாளர் பேசியது என்ன ?

33 ஆண்டுகள் ஜெயலிதாவுடன் இருந்த போது பல துரோகங்களை சந்தித்து உள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒரே குடும்பமாக செயல்படும், எந்த சலசலப்புக்கும் நானும் , அதிமுக தொண்டர்களும் அஞ்ச மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மேலும் பல கருத்துக்களை பேசிய சசிகலா,

ஒ. பன்னீர் செல்வத்தின் பின்னணியில் திமுக தான் உள்ளது எனவும் குற்றம்சாட்டினர். பின்னர், சட்டபேரவையின் போது, திமுகவின் துரைமுருகன் கருத்துக்கு மவுனம் காத்தது கூட இதற்கான காரணம் தான் என சுட்டிக்காட்டி பேசினார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ...

ஒ.பன்னீர் செல்வம் கூறுவதை யாரும் நம்ப மாட்டாரகள் எனவும், யாரும் துரோகிகள் பின்னால், செல்ல வேண்டாம் எனவும் சசிகலா வேண்டுகோள் வைத்துள்ளார். கடைசியாக, தான் முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட பின்பு, 48 மணி நேரத்தில் மனம் இப்படியும் மாறுமா ஒபிஎஸ் என கம்பீர கேள்வி எழுப்பி, தன் உரையை முடித்துக்கொண்டார் ஒபிஎஸ்