வருமான வரித்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் மக்களுக்கு நல்ல பயனுள்ள பல திட்டங்களையும், வேலையை விரைந்து முடிக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது

இதனை தொடர்ந்து தற்போது, பான் கார்டுக்கு விண்ணப்பித்தால் அடுத்த 4 மணி நேரத்தில், உடனடியாக கிடைக்கும் படி செய்ய ஆயத்தமாகி வருகிறது வருமான வரித்துறை. இது குறித்து பேசிய மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுசில் சந்திரா வருமான வரித்துறையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் மேம்படுத்தபட்டு வருவதாக அவர் தெரிவித்து உள்ளார். 

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வருமான வரித்துறையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், முன்கூட்டியே வரியை செலுத்துவது, வருமான வரித்தாக்கல், பணத்தை பெறுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் துரிதமாக செயல்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருவதாக அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் இந்த ஆண்டில் மட்டும் அதாவது 2018 - 2019 ஆம் நிதிண்டில் வருமான வரித் தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்து 6 கோடியே 8 லட்சத்தைக் கடந்துள்ளது என சுசில் சந்திரா தெரிவித்து உள்ளார்.

இதன் மூலம் இனி வரும் காலங்களில் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது அடுத்த நான்கு மணி நேரத்தில் மிக விரைவாக பெற முடியும் என்பது மகிழ்ச்சியான செய்தி.