Asianet News TamilAsianet News Tamil

2 மாதத்திற்குள் மக்கள் எதிர்பாக்கும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.. பிறந்த நாளில் உறுதியெடுத்த மு.க ஸ்டாலின்.

இன்னும் 2 மாதத்திற்குள் மக்கள் எதிர்பாக்கும் ஆட்சி மாற்றம் தமிழகத்தில் ஏற்படவிருக்கிறது. நேற்றில் இருந்து கூட்டணி கட்சி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

Within 2 months, the Government change that the people are expecting will take place .. MK Stalin who was committed to his birthday.
Author
Chennai, First Published Mar 1, 2021, 1:10 PM IST

தனது 68வது பிறந்தநாளையொட்டி  அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்னும் 2 மாதத்திற்குள் மக்கள் எதிர்பாக்கும் ஆட்சி மாற்றம் தமிழகத்தில் ஏற்படவிருக்கிறது. 

நேற்றில் இருந்து கூட்டணி கட்சி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. அதே போல் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.வரும் மார்ச் 7 ஆம் தேதி திருச்சியில் திமுக மாநாடு நடைபெருகிறது, திருச்சி மாநாட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு பார்வையில் இலட்சிய பிரகடனத்தை வெளியிடுகிறோம். 

Within 2 months, the Government change that the people are expecting will take place .. MK Stalin who was committed to his birthday.

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அனைத்து துறைகளிலும் தமிழகம் முதல் இடத்தில் வரும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதனை செயல்படுத்தி காட்ட வேண்டிய பொருப்பு என்னுடையது. இதுவரை தமிழக மக்களை சந்தித்த அடிப்படையில் தொலைநோக்கு பார்வை ஆவணத்தை வெளியிடயிருக்கிறேன். அடுத்த 20 நாட்களில் 2கோடி தமிழக மக்களிடம் திட்டம் குறித்து தெரிவிக்கவிருக்கிறோம்.

 Within 2 months, the Government change that the people are expecting will take place .. MK Stalin who was committed to his birthday.

தமிழகத்தில் ஊதாரித்தனமான ஆட்சி நடக்கிறது, அதை தூக்கி எரிய உறுதிதொழி எடுக்க வேண்டும் என பிறந்தநாளில் முடிவெடுத் திருக்கிறேன். தமிழகத்தில் மோடி அமித்ஷா போன்றோர் திமுகவை தாக்கி பேசி செல்கிறார்கள், அதை பற்றி திமுக-விற்கு கவலை இல்லை, ஒபிஎஸ்- இபிஎஸ் என ஊழல் கரங்களை உயர்த்தி பிடித்தவர் மோடி, தமிழகத்தில் கடன் சுமை அதிகரித்துவரும் நிலையில் அது குறித்தும் தேர்தல் அறிக்கையில் இடம்பெரும், இவ்வாறு அவர் பேசினார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios