பெரும்பாலும் சசிகலா இதுவரை தனது பிறந்த நாளை கொண்டாடியதில்லை. தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா கடந்த 18 ஆம் தேதி மிக சிறப்பாக கொண்டாடினார். சிறையில் உள்ள கைதிகளுக்கு இனிப்பும், உணவும் வழங்கி அசத்தினார்.

அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் சசிகலா பெயரில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இந்த பிரசாதங்களை எடுத்துக் கொண்டு சிறைக்கு சென்ற டி.டி.வி.தினகரன், அதை சசிகலாவுக்கு வழங்கியிருக்கிறார். மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்ட சசிகலா தற்போதைய அரசியல் நிலவரம் குறித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது தற்போது எடப்பாடி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்து வரும் பனிபோரால் பாஜக கொஞ்சம், கொஞ்சமாக அதிமுகவைவிட்டு விலகிக் கொண்டிருப்பதாக வெளியான தகவலை டி.டி.வி.,. சசிகலாவிடம் கூறியிருக்கிறார்.

18 எம்எல்ஏக்கள் வழக்கில் டிடிவி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்றே பெரும்பாலான சட்ட வல்லுநர்கள் கருதுவதால், பாஜக , அதிமுக மீது நம்பிக்கை இழந்து ஆட்சியைக் கவிழ்க்கும் என உறுதியான தினகரன் தரப்பினர் நம்புகின்றனர்.

அது மட்டுமல்லாமல் எதிரிகளை வீழ்த்த சசிகலாவில்  பிறந்த நாளான்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றதோடு, குரு பெயர்ச்சி வருவதால் இனி எல்லாம் நல்லதே நடக்கும் என நம்புகிறார் சசிகலா.

அது மட்டுமல்லாமல் ரஜினி, அமமுக மற்றும் பாஜக கூட்டணியை உருவாக்க தினா தரப்பு டெல்லியில் காய் நகர்த்தி வருவதாகவும், ரஜினி இதற்கு ஒப்புக் கொண்டால் அடுத்தடுத்து கவிழ்ப்பு வேலைகள் உறுதி செய்யப்பட்டு விடும் என்று சசிகலாவுக்கு சொல்லப் பட்டிருக்கிறது, இதனால் சற்று தெம்பான சசிகலா அடுத்த மூன்று மாதங்களுக்குள் எடப்பாடி அரசு கண்டிப்பாக கவிழும் என முழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.