Asianet News TamilAsianet News Tamil

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கண் துடைப்பா..? காண்டாகும் டி.டி.வி.தினகரன்..!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பைப்போல இதுவும் ஒரு கண்துடைப்புக்கான அறிவிப்பா? என வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்.
  

Will the reservation for the Vanniyar wipe the eye ..? says TTV Dhinakaran ..!
Author
Tamil Nadu, First Published Feb 27, 2021, 12:39 PM IST

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பைப்போல இதுவும் ஒரு கண்துடைப்புக்கான அறிவிப்பா? என வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்.

Will the reservation for the Vanniyar wipe the eye ..? says TTV Dhinakaran ..!
  
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டு ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இந்த மசோதா, அரசு கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கவும், சீர்மரபினருக்கு 7 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இதர பிரிவினருக்கு 2.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ‘’எல்லா சமூகங்களுக்கும் சரியான இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அவசரகதியில் வன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது தேர்தலுக்காகத் தான் என்பது எல்லாருக்குமே வெளிப்படையாக தெரிகிறது.

Will the reservation for the Vanniyar wipe the eye ..? says TTV Dhinakaran ..!
  
109 சமூகங்களை உள்ளடக்கிய எம்.பி.சி பிரிவில் எந்த சமூகமும் பாதிக்கப்படாத அளவிற்கு இட ஒதுக்கீட்டினை முறையாக வழங்குவதுதான் சரியான சமூக நீதியாக இருக்க முடியும். எதற்காக இந்த அவசர கோலம்? வன்னியர் உள் ஒதுக்கீட்டினை ஆய்வு செய்ய இந்த அரசாங்கம் அமைத்த நீதிபதி குலசேகரன் கமிட்டி என்ன ஆனது? பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பைப்போல இதுவும் ஒரு கண்துடைப்புக்கான அறிவிப்பா? என்ற சந்தேகம் எல்லோரிடமும் ஏற்பட்டிருக்கிறது’’என கேள்வி எழுப்பி இருக்கிறார். Will the reservation for the Vanniyar wipe the eye ..? says TTV Dhinakaran ..!

மிகவும் பிற்படுத்தபட்ட சாதிகளுக்கான இட ஒதிக்கீடே 20% தான். மிகவும் பிற்படுத்தபட்ட பிரிவில் 107 சாதிகள் உள்ளன. மிகவும் பிற்படுத்தபட்ட பிரிவிற்கு ஒதுக்கபட்டதே 20%. ஒரு சாதிக்கு மட்டும் 10.5% கொடுத்து விட்டால் மீதமுள்ள 106 சாதிகளின் நிலைமை என்னவாகும்?’’ என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios