காங்கிரஸை திமுக கழற்றிவிடக் காரணம், 2ஜி மேல்முறையிட்டு வழக்கு ஜனவரி 24 முதல் தொடர்ந்து நடக்கபோகிறது என்பது தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

 

தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் ஒருவரும், பெண் தலைவர் ஒருவரும் சோனியாவிடம், 'சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டாம். ரஜினியுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி, ஆட்சியில் பங்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது' என்பதால் ப.சிதம்பரம் போட்டுக் கொடுத்த ப்ளான் படி திமுகவை விட்டு விலக காங்கிரஸ் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் காங்கிரஸ்- திமுக விலகலுக்கு காரணம் என்ன? இது சரியான முடிவா? என்பது குறித்து அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் கருத்து கேட்டோம். இதுகுறித்து பாண்டியன் பிள்ளை என்பவர், ‘’தி.மு.க தோல்விகளுக்கு முக்கிய காரணம் காங்கிரஸுக்கு அதிக இடங்களை கொடுத்ததால்தான். இன்னும் இவர்களுக்கு அதிக இடங்களை கொடுத்தால் தி.மு.க செல்வாக்கு குறைய வாய்ப்பு அதிகம். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க அதிக இடங்களில் போட்டியிடவேண்டும். மும்முனை போட்டிக்கான அறிகுறிகள் தான் இவை. மக்கள் தி.மு.க.,வின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்'' என்கிறார்.

ஏழுமலை என்பவர், ‘’காங்கிரஸை திமுக கழற்றிவிடக் காரணம், 2ஜி மேல்முறையிட்டு வழக்கு ஜனவரி 24 முதல் தொடர்ந்து நடக்கபோகிறது. கனிமொழியை காக்க பிஜேபி பக்கம் நூல் விட்டு, பார்க்கிறார் ஸ்டாலின். ஏற்கனவே குடியுரிமை, எதிர்ப்பு போராட்டத்தை மெல்ல அடக்கம் பண்ணிவிட்டது, திமுக’’ என்கிறார்.

இதுகுறித்து ஜி.எம்.எம் என்பவர், ’’காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய பங்கு அளிக்க வேண்டாம் என திமுக முடிவு சரியானது. காங்கிரஸ் கட்சியில் நிலையான, தெளிவான கொள்கை இல்லை. ஸ்டாலின், சோனியா அம்மையார் கூட்டத்திற்கு போகவில்லை. ஏன்? தமிழகத்தில் 'ஒரு அடக்கப்பட்ட இந்து அலை ஓடுகிறது. இது அத்திவரதர் , சக்தி பீட்டா கூட்டம் , சபரிமலை பயணம், பழனி ஆண்டவர் தரிசனம், ஏன் ஒவ்வொரு பிரதோஷம். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சிவ வழிபாடு, மாலையில் எல்லா சிவன் கோயில்களிலும் முழுநிலா. திருவண்ணாமலை கிரிவளத்தில் அலைமோதும் கூட்டம்.

ஏன் தி.மு.க பிரமுகர்கள் அணுகும் ஜாதகக்காரர்கள் செய்யும் பூசை, அபிஷேகம் ஹோமம் போன்றவை  தி.மு.க.,வை குறிப்பாகஸ்டாலினை, சோனியாவிடம் இருந்து பிரித்துள்ளது. அதனால் கிருத்துவ- முஸ்லீம் ஓட்டுக்காக இந்துக்களை, இந்து கடவுள்களை கேலி செய்வது, ஆனால் தன் மனைவியை கோயில் கோயிலாக சுற்ற வைப்பது ஸ்டாலினின் தந்திரம். இந்து ஓட்டுக்கள் இல்லையெனில் என்ன ஆகும்? ஒரு வேலை முஸ்லீம்கள் தமிழகத்தையோ இந்தியாவையோ ஆள ஆரம்பித்தால்  இந்த ஸ்டாலினோ, கம்யூனிஸ்ட் ராஜாவோ,  சீமானோ, வீரமணியோ முட்டிக்கொண்டு கதறுவார்கள்’’ எனக் கூறுகிறார்.