இந்து விரோத திக- திமுக தமிழக வீதியெங்கும் விநாயகர் சிலைகளை உடைத்த ஈ.வெ.ரா வை திமுக கண்டிக்குமா? (Road Side)ஆர்.எஸ்.பாரதி ஈ.வெ.ரா அநாகரீகமான நபர் என்று ஒப்புக் கொள்வாரா? என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்து விரோத திக, திமுக: கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசிய குற்றத்திற்கு கைது செய்யப்பட்டுள்ள செந்தில் வாசகனுக்கு பெரியார் விருது தந்தது சுப.வீ. அவர் பக்கா திமுக உறுப்பினர். முருகப்பெருமானை இழிவுபடுத்த கட்டளையிட்ட இந்து விரோத திமுக மக்கள் எதிர்ப்பு கண்டு இன்று வேஷம் கட்டுகிறது. அன்றே வேல் சங்கமம் நிகழ்ச்சி நடத்தினோம். அதற்கு இன்று தேவை ஏற்பட்டிருப்பதை உணர்வோம்.

அன்றே வேல் சங்கமம் நிகழ்ச்சி நடத்தினோம்...! அதற்கு இன்று தேவை ஏற்பட்டிருப்பதை உணர்வோம். கந்த சஷ்டி கவசத்தை ஈ.வெ.ரா. கும்பல் அவமதித்த போது ஏன் இவர் துடிக்கவில்லை. இவர் ஒரு கலப்படமற்ற இந்து விரோதி என்கிற காரணத்தால். இவர்களில் யாராவது கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசிய ஈனப் பிறவிகளை கண்டித்தார்களா?’’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.