மு.க.அழகிரி பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம் என்று தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் கூறியிருந்ததற்கு மு.க.அழகிரி பதிலடி கொடுத்துள்ளார்.
மு.க.அழகிரி பாஜகவுக்கு வந்தால் முழு மனதுடன் வரவேற்போம், ஆனால் அவர் எங்களிடம் அது குறித்து பேசவில்லை என பாஜக தமிழக தலைவர் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

 

திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக, முடிசூடா மன்னனாக தன்னை கட்டிக் கொண்டவர் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.
 2014ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு நேரடி அரசியலில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.  கருணாநிதி காலம் முதல் அரசியலில் மீண்டும் நுழைய ஆசைப்பட்டார்... ஆர்வப்பட்டார். ஆனால், மு.க.ஸ்டாலின் அல்ல... அவரது வாரிசு உதயநிதி காலம் வரை அவரால் இணைய முடியவில்லை. 

இதனால், ஆத்திரமடைந்து வரும் மு.க.அழகிரி தனிக்கட்சி ஆரம்பிக்கப்போவதாகவும், பாஜகவில் இணையப்போவதாகவும், ரஜினி ஆரம்பிக்கப் போகும் கட்சியில் இணையப்போவதாகவும், மீண்டும் தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக வரும் 20ம் தேதி மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், நேற்று செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி, பாஜகவுடன் இணையும் திட்டமில்லை எனக்கூறினார். ஆனால் அடுத்து தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.   

இந்நிலையில், திருவண்ணாமலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், திமுக முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம். மு.க.அழகிரி உடன் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என விளக்கமளித்து இருந்தார். இந்நிலையில் விளக்கமளித்துள்ள மு.க.அழகிரி, ’’அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஜனவரி அல்லது அதற்கு பிறகு ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி அறிவிப்பேன்’’என்று மீண்டும் தெரிவித்துள்ளார். பாஜக பலமுறை மு.க.அழகிரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியத்தியும் உடன்படாததால் தான் ரஜினியை நம்பி பாஜக வேண்டாம் என்கிற அறிவிப்பை மு.க.அழகிரி வெளிப்படுத்தி இருப்பதாக கூறப்பட்டது. 

மு.க.அழகிரி பாஜகவுக்கு வந்தால் முழு மனதுடன் வரவேற்போம், ஆனால், அவர் எங்களிடம் அது குறித்து பேசவில்லை என பாஜக தமிழக தலைவர் என எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் அவசர அவசரமாக, ரஜினி எங்கே கட்சி ஆரம்பிக்க மாட்டாரோ என்று எண்ணிய மு.க.அழகிரி, முருகன் பேட்டி வெளியான அடுத்த சில மணித்துளிகளில், அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஜனவரி அல்லது அதற்கு பிறகு ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி அறிவிப்பேன்’’என்று மீண்டும் தெரிவித்துள்ளார். ஏதோ இதில் இருந்து ஒன்று மட்டும் புரிகிறது... தம்பி மு.க.ஸ்டாலிக்கு எதிராக மு.க.அழகிரி தையத் தக்க ஆட்டம் போட கிளம்பி விட்டார் என்பது மட்டும் புரிகிறது.