Will Rajini come to politics? Will? Confirm this time ...!
வரும் 26 ஆம் தேதி மன்ற நிர்வாகிகளை சந்திக்கும் ரஜினிகாந்த், தமிழகத்தின் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கப்போகும் செய்தியை நிச்சயம் அறிவிப்பார் என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபடுவது பற்றி பல்வேறு தகவல்கள் கடந்த சில மாதங்களாக வெளிவந்த வண்ணம் உள்ளது. ஆனாலும், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து, அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
.jpg)
கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது, அரசியலுக்கு வருவது குறித்து, இலைமறைகாயாக கருத்து தெரிவித்திருந்தார். ரஜினிகாந்தின் இந்த பேச்சு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
போருக்குத் தயாராகுங்கள்.... நாட்டில் சிஸ்டம் கெட்டுப்போய் உள்ளது என் ரசிகர் மன்ற நிர்வாக சந்திப்பில் அவர் பேசியிருந்தார். இந்த நிலையில், வரும் 26 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை ரஜினிகாந்த், ரசிகர்களை சந்திக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
.jpg)
ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன், ரஜினி காந்த் சந்திப்பு குறித்து தமிழருவி மணியன் கூறும்போது, ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற பட்டிமன்றம் நிகழ்ந்து வருகிறது. இந்த கேள்விகளுக்கு விடை தரக்கூடிய வகையில் வரும் 26 ஆம் தேதி முதல் 31 ஆம தேதி வரையிலான ரசிகர்கள் சந்திப்பு இருக்கும்.

அந்த 6 நாட்களில் ரஜினிகாந்த், தமிழகத்தின் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கப்போகும் செய்தியை அவர் மிக நிச்சயம் அறிவிப்பார் என்று தமிழருவி மணியன் கூறினார். இடைத்தேர்தலை மட்டுமே சந்திக்கக்கூடிய ஒரு வேட்பாளராக ரஜினிகாந்த் தன்னை முன்னிறுத்துகிற மனிதர் இல்லை என்றும், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நல்ல ஒரு அரசியலை வளர்த்தெடுக்க வேண்டும் என்று ரஜினி விரும்புவதாகவும் தமிழருவி மணியன் கூறினார்.
