தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன நாகார்ஜுனா வின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் இவர் நடிப்பை தொடர்ந்து வருகிறார். அண்மையில் இவர் நடித்து வெளியான யூ டர்ன் திரைப்படம் ஹிட் ஆனது. திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் நாக சைதன்யா சமந்தா  ஜோடி ஸ்பெயின் நாட்டிலுள்ள இபிசா என்ற தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளது.  அங்கு நடிகை சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது ரசிகர்களின் கடும் எதிர்ப்புக்கும் கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது. சமந்தாவின் instagram பக்கத்தில் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் திமுக பங்கேற்காது என்றும் அழைப்பிதழில் பெயர் இருந்தாலும் முறையான அழைப்பு இல்லை என்று அதன் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் நாளை (30.9.2018) நடை பெற உள்ளது. நூற்றாண்டு விழா அழைப்பிதழில் வாழ்த்துரை வழங்குபவர்கள் பட்டியலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரும், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் பெயரும் இடம் பெற்றிருந்தன. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்று அதிமுக அமைச்சர்கள் கருத்துக்கள் கூறி வந்தனர். 

அரசு விழா என்பதால் அனைவரையும் அழைப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் இரு தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகொள் விடுத்திருந்தார்.

தமிழக மாவட்ட தலைநகரங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதன் நிறைவு விழா நாளை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தநிலையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் திமுக பங்கேற்காது என்று அதன் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளரிடம் பேசும்போது, எதிர்க்கட்சித் தலைவரை நான்காவது வரிசையில் அமரவைத்தார்கள். 

89 பேர் கொண்ட சட்டமன்ற கட்சியின் தலைவரை அவர்கள் நடத்தியவிதம் சரியாக இல்லை. இவ்வாறு விழாவில் கலந்து கொண்டு வருத்தம் ஏற்படும் வகையிலான ஒரு நிலையைச் சந்திக்க எங்களுக்கு விருப்பம் இல்லை என்றார்.

மேலும் அவர் பேசும்போது, வழக்கமாக ஒரு மாவட்டத்தில் விழா நடக்கிறதென்றால் அந்த மாவட்டத்தினுடைய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை போடுவார்கள். அப்படித்தான் எங்கள் பெயரையும் போட்டிருக்கிறார்களே தவிர அரசோ, அமைச்சர்களோ அவரை அழைத்து நீங்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என சொல்லி இருந்தால் ஒரு வேளை கலந்து கொண்டிருப்பார். 

அழைப்பிதழில் பெயர் இருக்கிறது என்பதைத் தாண்டி முறையான அழைப்பு இல்லை எனவே அதில் பலனில்லை என்று கருதுகிறோம் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். 

அமமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், இந்த விழாவில் பங்கேற்கபோவதில்லை என்று ஏற்கனவே கூறியிருந்ததார். இந்த நிலையில், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.