தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஒரே கட்டமாக மே மாதம் 18 ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெற உள்ளது. அன்று மோடி ஆட்சி நீடிக்குமா? என்பது தெரிய வரும்.  

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல்-  மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது வரும் ஜூன், 3ஆம் தேதியுடன், தற்போதைய மக்களவை உறுப்பினர்களில் பதவிக் காலம் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து 17 வது மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. டெல்லியில் உள்ள விக்யான் பவனில் செய்தியாளர்கள் முன்னிலையில், இந்திய தேர்தல் ஆணையர்களான சுனில் அரோரா, அசோக் லவாசா சுஷில் ஆகியோர் அறிவித்தனர். 

அதன்படி ‘’ வரும் மே மாதம் தேதி நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக அதாவது முதல் கட்டத்தேர்தல் ஏப்ரல் 11ம் தேதியும், இரண்டாம் கட்டத்தேர்தல் ஏப்ரல் 18 , மூன்றாம் கட்டத்தேர்தல் ஏப்ரல் 23ம் தேதியும், 4 கட்ட தேர்தல் ஏப்ரல்- 29ம் தேதியும், 5 கட்ட தேர்தல் மே- 6ம் தேதியும்  7ம் கட்டத்தேர்தல் கட்ட தேர்தல் மே-12 ம்தேதியும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 19ம் தேதி தொடங்க உள்ளது. 18 ம்தேதி தொடங்குகிறது. வேட்பு மனு பரிசீலனை 27ம் தேதியும், திரும்பப்பெறுவதற்கான தேதி ஏப்ரல் 29 மே 23ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். 

அன்றே எந்தக் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கப்போகிறது என்பது தெரிய வரும்.