கடந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் , முக்கியமான ஒரு விஷயம், தி.மு.க., தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, கோவை வடக்கு, தெற்கு, கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு, சிங்காநல்லுார், தென்காசி, தி.நகர், உடுமலை பேட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி கோவை தெற்கு உள்ளிட்ட பல தொகுதிகளில், மிக குறைந்த அளவு வித்தியாசத்தில்தான் அ.தி.மு.க.,விடம் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தது தி.மு.க. அதேசமயத்தில், அந்த வித்தியாசத்தைவிட, இந்த தொகுதிகளில் கூடுதலாக பா.ஜ., ஓட்டு வாங்கியிருந்தது. 

தற்போது அ.தி.மு.க., - பா.ஜ.க கூட்டணி தொடரும் எனச் சொல்லி இருப்பதால் இந்த முறையும் அப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்ற ஆலோசனை, தி.மு.க.,வில் நடந்து வருகிறது. அதாவது, பா.ஜ.க,வின் ஓட்டு வங்கியான ஹிந்துக்கள் ஓட்டுக்களை எப்படி அள்ளுவது எப்படி என திமுக தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.