ஒரு மதத்தை சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது தவறு என சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். 

பெண்கள் கடவுளால் பரத்தையர்களாக படைக்கப்பட்டவர்கள். இந்து தர்மப்படி அனைத்து பெண்களும் விபச்சாரிகளாக படைக்கப்பட்டவர்கள் என இந்து மதம் கூறுவதாக தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாளவன் அதை கடுமையாகவும் கண்டித்திருந்தார்.

ஆனால், எல்லா பெண்களையும் விபச்சாரிகளாக திருமாவளவன் கூறிவிட்டார் என்று பெரும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் நடிகைன்குஷ்பு, ‘’கூட்டணியில் உள்ள திருமாவளவன் பேசியது பற்றி திமுக- காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? பெண்களை தவறாக பேசிவிட்டு, அதை திசை திருப்பவே விசிக போராட்டம் அறிவித்துள்ளது.


 
மனு தர்மத்தில் பெண்களை அசிங்கப்படுத்தும் படி எதுவுமில்லை. அப்படியிருந்தால் திருமாவளவன் அதனை நிரூபிக்க வேண்டும். திருமாவை திமுக தலைவரும், கனிமொழியும், காங்கிரஸ் மாநில தலைவரும் கண்டிக்காதது ஏன்? பெண்களுக்கு எதிராக பேசிய விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வரை சென்று திருமாளவனுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்திருக்கிறேன். இந்த பிரச்சனை பெரிதானதால்தான், இதை மறைப்பதற்காக அவர் அவசர அவசரமாக போராட்டத்தை அறிவித்திருக்கிறார்’’ என்றும் தெரிவித்தார்.