இந்திரா காந்தியை கொன்றதை போல் என்னையும் பா.ஜ.க பாதுகாவலர்களால் கொல்ல பார்க்கிறார்கள் என ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், ‘’என்னை கொல்ல சதி நடக்கிறது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கொன்றதை போல் என்னையும் பா.ஜ.க பாதுகாவலர்களால் கொல்ல நேரிடும். எனது பாதுகாவலர்கள் மோடிக்குத்தான் ஓட்டு போட்டுள்ளனர். அவர்கள் ஒரு நாள் என்னைக் கொல்ல நேரிடும்’’என பகீர் குற்றச்சாட்டை கிளப்பி உள்ளார்.

கடந்த மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் பேரணி சென்ற போது மோதி நகர் பகுதியில் ஒருவரால் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டார். அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் ஜீப்பில் சென்று பிரசாரம் செய்யும் போது ஜீப் அந்த வாகனத்தில் ஏறி சிவப்பு கலர் டி-சர்ட் அணிந்த ஒருவர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆவேசமாக தாக்கினார். இந்நிலையில் இந்திராகாந்தியை போல பாதுகாவலர்கள் மூலம் தன்னை கொல்ல சதி நடப்பதாக பாஜக மீது குற்றம்சாட்டியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.