Asianet News TamilAsianet News Tamil

திமுகவை வசைப்பாடியவர்களும் இன்றைக்கு வாழ்த்துறாங்க! தேர்தலுக்குப் பிறகு அண்ணாமலை பதவியில் இருப்பாரா? சேகர்பாபு

கோட்டை மாரியம்மன் கோயிலில் 2016ம் ஆண்டு திருப்பணிகள் துவங்கப்பட்டு பல்வேறு காரணங்களால் குடமுழுக்கு விழா தள்ளி போனது. ஆனால் ஸ்டாலின் முதல்வரான பிறகு அடிக்கடி நேரடி ஆய்வு செய்யப்பட்டு திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு  நேற்று குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். 

Will Annamalai be in office after the parliamentary elections? Minister Sekar Babu tvk
Author
First Published Oct 28, 2023, 8:18 AM IST | Last Updated Oct 28, 2023, 8:24 AM IST

தமிழ்நாட்டில் அனைத்து மதத்தினருக்கும் பாதுகாப்பு இருக்கிறது என்பதற்கு கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் இலவசமாக தண்ணீர் பாட்டில் வழங்கிய நிகழ்வே சாட்சியாகும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். 

சேலம் கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயிலின் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்த நிலையில், சுமார் 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்க தேர் உலா நேற்று நடைபெற்றது. இதனை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- கோட்டை மாரியம்மன் கோயிலில் 2016ம் ஆண்டு திருப்பணிகள் துவங்கப்பட்டு பல்வேறு காரணங்களால் குடமுழுக்கு விழா தள்ளி போனது. ஆனால் ஸ்டாலின் முதல்வரான பிறகு அடிக்கடி நேரடி ஆய்வு செய்யப்பட்டு திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு  நேற்று குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இதையும் படிங்க;- விடாமல் அடுத்தடுத்து அரெஸ்ட்.. அமர்பிரசாத் ரெட்டிக்கு நவம்பர் 10ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Will Annamalai be in office after the parliamentary elections? Minister Sekar Babu tvk

திமுக ஆட்சியில் இதுவரை 1118 திருக்கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. குடமுழுக்கு நடைபெறாத கோயில்களில் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துகின்ற ஆட்சி இந்த ஆட்சி என்பதற்கு இந்த கோயிலே சாட்சி. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 5,428 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை மீட்கப்பட்டுள்ளது. 67 தங்க தேர்கள், 57 வெள்ளி தேர்கள் நல்ல நிலையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Will Annamalai be in office after the parliamentary elections? Minister Sekar Babu tvk

இந்த ஆட்சியில் புதிதாக 3 தங்கதேர்கள், 5 வெள்ளி தேர்கள் வாங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த பணிகளும் நடைபெற்று வருகிறது. முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் கோயில் திருப்பணிகளும், தேர் மராமாத்து பணிகளும் புதிய தேர்கள் வாங்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. 71 புதிய மரத்தேர்கள் 58 கோடி செலவில் செய்து கொண்டு இருக்கிறோம். கோயில் திருப்பணிகள் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. வசைப்பாடியவர்களும் திமுக ஆட்சியை வாழ்த்தும் நிலையில் உள்ளனர். தமிழ்நாட்டில் அனைத்து மதத்தினருக்கும் பாதுகாப்பு இருக்கிறது என்பதற்கு கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் இலவசமாக தண்ணீர் பாட்டில் வழங்கிய நிகழ்வே சாட்சியாகும். 

இதையும் படிங்க;- இது அச்சுறுத்தல் நடவடிக்கை.. அரசியல் ஆதாயம் தேட வெறியோடு அலையும் பாஜக.. இறங்கி அடிக்கும் முத்தரசன்.!

Will Annamalai be in office after the parliamentary elections? Minister Sekar Babu tvk

திமுக ஆட்சியில் 450 கோடி ரூபாய் அரசு மானியமாக கோவில் திருப்பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் இவ்வளவு பெரிய தொகையை மானியமாக வழங்கியதில்லை. தான் அதிகாரத்திற்கு வந்தால் இந்து சமய அறநிலைத்துறையே இருக்காது என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை அந்த பதவியில் இருப்பாரா என பாருங்கள்? இருந்தால் இந்து சமய அறநிலையத்துறை குறித்து பேசட்டும் என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios