அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில், தங்கள் அதிரடியான திட்டத்தை செயல்படுத்த தொடங்கி உள்ளதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். விரைவில் தமிழக சட்டமன்ற கூடவுள்ள நிலையில், திமுக தரப்பின் செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 

அதாவது, அதிமுக தமிழக மக்களிடையே முடிந்தவரை கெட்ட பெயர் வாங்கட்டும். மத்திய அரசின் திட்டங்களை தட்டிக் கேட்க இயலாத அரசின் செயல்பாட்டை, பொதுமக்கள் நிச்சயம் சமயம் பார்த்து தூக்கி எறிவர். வரும் உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய அடித்தளம் அமைத்து, வரும் சட்டமன்ற தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியை பெற்று விடலாம் என்று கருதுகிறார். 

மற்றொரு பக்கம் அதிமுக எம்.எல்.ஏக்களை வளைத்துப் போடவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் சட்டமன்ற கூடவுள்ள நிலையில், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம், குடிநீர் பிரச்சனை உள்ளிட்டவற்றை கையில் எடுக்க திமுக திட்டமிட்டுள்ளது.

 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், அதிமுக ஆட்சியை அகற்ற என்ன செய்ய வேண்டுமோ, அதனை செய்வோம். என்னென்ன செய்ய போகிறோம் என்பதை, இப்போது கூற முடியாது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எப்படி எதிர்கொள்வோம் என்பதை பிறகு பாருங்கள்’ என்று கூறியுள்ளார். அதேபோல் இன்று போராட்டத்தில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின் தேர்தல் வராமலே தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வரும்’ எனக் கூறியது அதிமுக தரப்பை கலங்கடித்து வருகிறது.