அதிமுக அமமுக இணைப்பு குறித்து ஸ்டாலின் போல ஜோதிடம் சொல்ல முடியாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சி கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, கூட்டுறவு சங்கங்கள் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்படும் என மத்திய அரசு அறிவித்ததற்கு, தமிழக அரசு தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டதாக கூறினார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறினார். 

2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு  அதிமுக - அமமுக கூட்டணி வைக்குமா அல்லது இரு கட்சிகளும் இணையுமா என்ற கேள்விக்கு, அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்று கூறிய அவர், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று கூற முடியாது எனவும் தெரிவித்தார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவதால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படபோதில்லை. கட்சி வலுவாக இருப்பதால் எங்களுக்கு பிரச்சனை இல்லை என்று தெரிவித்துள்ளார்.