ஐந்து லட்ச ரூபாய் பணத்திற்காக தொட்டு தாளிகட்டிய கணவனை இன்னொரு பெண்ணுடன் சேர்ந்துவாழ மனைவி சம்மதித்துள்ள சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  பரந்து விரிந்த இந்த உலகத்தில்  ஏதோ ஒரு மூளையில் ஏதாவதொரு  சுவாரசிய சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  அந்த சம்பவங்கள் சில நேரங்களில் சமூகவலைதளங்களில் பரவி அது மறக்க முடியாத நிகழ்வுகளாகவும் மாறிவிடுகிறது.  அந்த வகையில் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.  தன் கணவனுடன் தொடர்பில் இருந்த வேறொரு பெண்ணுடன் கணவனை சேர்ந்து வாழ  மனைவி  அனுமதித்துள்ள சம்பவம்தான் அது. கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே,  கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிறகு அக்கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. 

அது  நாளடைவில் அவர்களுக்கிடையில் காதலாக மாறி, அக்கணவன் அப்பெண்ணுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். இது அவரது மனைவிக்கு தெரியவர, அவர் தன் கணவருடன் சண்டைபோட்டதுடன், அந்த பெண்ணுடன் இனி பழகக்கூடாது என கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் இருவருக்குமான உறவு  நீடித்தது.  ஒரு கட்டத்தில் அந்த நபர் மனைவியை விட்டுப் பிரிந்து அந்த பெண்ணுடனேயே நிரந்தரமாக சேர்ந்து வாழ ஆரம்பித்தார். இதனையறிந்த மனைவி அடிக்கடி அந்த பெண்ணிக் வீட்டிற்குச் சென்று கணவருடன் சண்டை போட்டு வந்ததுடன் தன்னுடன் சேர்ந்து வாழவருமாறு அழைத்தார்.ஆனால் மனைவியின் கோரிக்கையை நிராகரித்த கணவன், தன்னுடன் உள்ள பெண்ணுடன் வாழவே விரும்புவதாக கூறியுள்ளார்.

 

இந்நிலையில்  மனைவியான அந்த பெண்ணுக்கு கடன் இருப்பதை அறிந்துகொண்ட கணவருடன் வசிக்கும் பெண், அவரிடம் நைசாக பேசி, பணம் தருவதாக கூறி ,கணவனை விட்டு தரும்படியும் கேட்டுள்ளார்.  முதலில் அதை ஏற்க மறுத்த மனைவி, அதிக தொகை தந்தால் சம்மதிக்க தயார் என கூறியுள்ளார், ஒரு கட்டத்தில் 10 லட்ச ரூபாய் வரை  நடந்த பேரம் 5 லட்ச ரூபாயில் முடிந்துள்ளது. இதனையடுத்து கணவரை இனி  அழைத்து தொந்தரவு செய்ய மாட்டேன் என எழுதி கொடுத்த மனைவி அந்தப் பெண் கொடுத்த ஐந்து லட்ச ரூபாயுடன் வீடு திரும்பினார். ஐந்து லட்சம் ரூபாய் பணத்துக்காக கணவனை வேறொரு பெண்ணுக்கு விட்டுக் கொடுத்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது