Asianet News TamilAsianet News Tamil

#BREAKING விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடு விதிக்கப்பட்டது ஏன்? பாஜகவிற்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்.!

விநாயகர் சிலை செய்யும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு 10,000 நிவாரண நிதி வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் முதல் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே மழைக்காலங்களில் அவர்களுக்கு 5000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படுகிறது.

Why was vinayagar chathurthi restricted? CM Stalin explanation to BJP
Author
Chennai, First Published Sep 7, 2021, 12:26 PM IST

ஓணம், பக்ரீத் தளர்வுகளால் கேரளாவில் கொரோனா அதிகரித்ததை கவனத்தில்கொண்டே தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் என முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். 

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்பாக  விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் முன்வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்;- விநாயகர் சதுர்த்தி விழாவை பொறுத்தவரையில் அந்த கட்டுப்பாடுகள் என்பது பொது இடங்களில் சிலையை வைத்து கொண்டாடுவதற்கு தான் அரசு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனிநபர் வீடுகளில் இந்த விழாவை கொண்டாடுவதற்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

Why was vinayagar chathurthi restricted? CM Stalin explanation to BJP

மேலும், தமிழக அரசு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்பது ஒன்றிய அரசால் வெளியிடப்பட்டிருக்கக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையிலேயே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஓணம், பக்ரீத் தளர்வுகளால் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை கவனத்தில்கொண்டே தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றார். 

Why was vinayagar chathurthi restricted? CM Stalin explanation to BJP

விநாயகர் சிலை செய்யும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு 10,000 நிவாரண நிதி வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் முதல் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே மழைக்காலங்களில் அவர்களுக்கு 5000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படுகிறது. தற்போது, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டாத நிலையில் 10,000 ரூபாய் நிவாரண தொகை 3000 குடும்பங்களுக்கு வாங்கப்படும் என்றார். 

Follow Us:
Download App:
  • android
  • ios