செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது ஏன்.? மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்
அமைச்சர் செந்தில் பாலாஜி முதலில் இருந்தே காவேரி மருத்துவமனை சிகிச்சை பெற்று வருவதால் அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் என அவரது மனைவியார் விருப்பம் தெரிவித்ததால் மாற்றப்பட்டதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி கைது
அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற போக்குவரத்து துறை மோசடி தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி கைது செய்தது. செந்தில் பாலாஜியை கைது செய்து அழைத்து சென்ற போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொண்டனர். அதில் இருதய பகுதியில் 3 அடைப்பு இருப்பதாக தெரியவந்தது. தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றத்தின் அனுமதியோடு செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு நேற்று மாற்றம் செய்யப்பட்டார்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
இந்தநிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியின் 58வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கீழ் பக்கம் அரசு மருத்துவமனையின் 58 வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றதாகவும், 150 மருத்துவ மாணவர்கள் பட்டம் பெற்றதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து செந்தில் பாலாஜி உடல்நிலை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆஞ்சோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆஞ்சோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக மூன்று நாட்களுக்கு ரத்த குழாயில் ரத்த கசிவானது இருக்கும். அந்த ரத்தக் கசிவு நின்ற பிறகுதான் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்க முடியும் என கூறினார்.
காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது ஏன்.?
மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு பிறகு தான் பைபாஸ் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதற்கு காரணம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட காரணம் அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி கேட்டதின் ஒரே காரணம் தான் என கூறினார். அமைச்சர் செந்தில் பாலாஜி முதலில் இருந்தே காவேரி மருத்துவமனை சிகிச்சை பெற்று வருவதால் அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் என அவர் மனைவியார் தெரிவித்ததாக கூறினார். அவர்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்