மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரில் ஏன் செஸ் ஜாம்பவான் விஸ்வநாத் ஆனந்த் ஏன் இடம் பெறவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்,

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரில் ஏன் செஸ் ஜாம்பவான் விஸ்வநாத் ஆனந்த் ஏன் இடம் பெறவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார், மேலும் அந்த டீசர் முழுக்க முழுக்க திமுக, அறிவாலய அரசை விளம்பரபடுத்தும் வகையிலேயே உள்ளது என கடுமையாக விமர்சித்துள்ளார். இதேபோல் தமிழ்நாட்டின் செஸ் சாம்பியன்களான விஸ்வநாத் ஆனந்த், பிரகியா ஏன் கைவிடப்பட்டுள்ளனர் என்றும் பல நெட்டிசன்கள் தமிழக அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் நிர்வாக ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் போட்டியின் தொடக்க விழாவில் பாரத பிரதமர் மோடி கலந்து கொள்ள வேண்டும் என அவருக்கு தமிழக அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Bwf Singapore open2022: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன்: பைனலுக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலினை, தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி நலம் விசாரித்த நிலையில், சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் அவசியம் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதேபோல் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் ஆகியோர் வரும் 19 ஆம் தேதி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளனர்.

போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போதிருந்தே மாமல்லபுரத்து தீவிரமாக நடைபெற்று வருகிறது, தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதால் ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகிறது, நேரு விளையாட்டு அரங்கில் துவக்க விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது, எனவே போட்டியினை மாமல்லபுரத்திலும் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது சர்வதேச நாடுகளின் கவனத்தை தமிழகத்தின் பக்கம் உற்றுநோக்க வைத்துள்ளது. 

Scroll to load tweet…

இந்நிலையில் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை அவர் டீசரை வெளியிட்டார். அந்த டீசரில் மாமல்லபுரம் மற்றும் சென்னையில் உள்ள முக்கிய இடங்கள் இடம் பெற்றுள்ளதுடன், சதுரங்க பலகை போல் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் ஸ்டாலின், ஏ.ஆர் ரகுமான் ஆகியோர் வெள்ளை உடை அணிந்து மிக ஸ்டைலாக நடந்து வருவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. டீசருக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்: செஸ் ஒலிம்பியாட் : இந்தியா நடத்துகிறதா...? இல்லை திமுக ஸ்டாலின் நடத்துகிறாரா? தேசிய கொடி இல்லாத டீசர்!

பரதநாட்டிய நடனமும் அதில் இடம் பெற்றுள்ளது, தற்போதைய இந்த டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பலர் இதை லைக் செய்து வரும் அதே நேரத்தில் பலரும் டீசரை விமர்சித்து வருகின்றனர், சர்வதேச அளவில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழகத்தை செஸ் போட்டியில் சர்வதேச அளவில் உயர்த்திய செஸ் ஜாம்பவான்கள் விஸ்வநாதன் ஆனந்த், மற்றும் பிரகியான் ஆகியோர் ஏன் இந்த டீசர் காட்சிகளில் இடம்பெறவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Scroll to load tweet…

இது மட்டுமின்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்த விளம்பரத்தில் ஏன் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இடம்பெறவில்லை இது முழுக்க முழுக்க திமுக, அறிவாலய அரசை விளம்பரம் செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது, தமிழக முதலமைச்சரே தயவு செய்து இப்படி நடிப்பில் கவனம் செலுத்துவதை விட்டு சீர்கெட்டு கிடக்கிழ தமிழகத்தை சரி செய்வதில் கணவம் செலுத்துங்கள் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.