Asianet News TamilAsianet News Tamil

சசிகலாவை கட்சியில் இருந்து நீக்காதது ஏன்..? பரபரப்பு விளக்கம்..!

ஜெயலலிதாவால் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட நபர் இந்த கட்சியை கைபற்றுவோம் என சொன்னால் கேளிக்கையான செயல்

Why Sasikala was not expelled from the party? Exciting explanation
Author
Tamil Nadu, First Published Feb 1, 2021, 11:13 AM IST

ஜெயலலிதாவால் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட நபர் இந்த கட்சியை கைபற்றுவோம் என சொன்னால் கேளிக்கையான செயல் என சசிகலா குறித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார்.Why Sasikala was not expelled from the party? Exciting explanation

விக்டோரியா மருத்துவமனையிலிருந்து சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இல்லாவிட்டாலும் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் விக்டோரியா மருத்துவமனையிலிருந்து தேவனஹள்ளியில் உள்ள கோடாகுருக்கி பண்ணை வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் ஜெயலலிதாவின் காரை பயன்படுத்தினார். அதில் அதிமுக கொடி பயன்படுத்தப்பட்டுள்ளது.Why Sasikala was not expelled from the party? Exciting explanation

இதற்கு அதிமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, ’’சட்டதிட்டங்கள் மாற்றப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற அமைப்பை ஓருவாக்கி செயற்குழு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது.

Why Sasikala was not expelled from the party? Exciting explanation

தர்மமும், நியாயமும் உண்மையானவர்கள் பக்கம் உள்ளது. ஜெயலலிதாவால் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட நபர் இந்த கட்சியை கைபற்றுவோம் என சொன்னால் கேளிக்கையான செயல். அந்த செயல் அவரை காப்பாற்றி கொள்ள அவர்களிடம் உள்ளவர்களை ஏமாற்றி வருகிறார்’’ என்றார். அப்போது சசிகலாவை ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை என்கிற கேள்விக்கு, ‘’அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உறுப்பினர்கள் புதுப்பித்தல் நடந்தது. அதில் சசிகலா தன்னை புதுப்பித்து உறுப்பினராக இணைத்துக் கொள்ளவில்லை. அப்படி கட்சியில் இல்லாத சசிகலாவை எப்படி நீக்க முடியும்?’’எனத் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios