why rajini hesistae to allaince with bjp
ரஜினியை எப்படியாவது பாஜகவில் இழுத்து போட்டு, அவரது செல்வாக்கின் மூலம், தமிழகத்தில் காலூன்றி விடவேண்டும் என்று அக்கட்சி தலைவர்கள் கடுமையாக போராடி வந்தனர்.
அதற்காகவே, ஆர்.கே.நகர் தேர்தலின்போது, பாஜக வேட்பாளர் கங்கை அமரன், ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆனால், கங்கை அமரனை தாம் ஆதரிக்கவில்லை என்பதை ரஜினி நேரடியாகவே சொல்லிவிட்டார்.
அதனால், ரஜினிக்காக காத்திருக்க கூடாது என்று பாஜக, அப்போதே முடிவு செய்து விட்டது. அதே சமயம், கூட்டணி என்று வரும்போது, அதில் பாஜக நிச்சயம் இருக்கும் அளவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
.jpg)
தமிழகத்தில், பாஜகவுக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை என்பது ரஜினிக்கு நன்றாகவே தெரியும். மேலும், இவ்வளவு ஆண்டுகளாக தமக்கிருக்கும் செல்வாக்கு, பாஜகவுக்கு போனால் பாதிக்கும் என்றும் அவர் நினைக்கிறார்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை பாஜகவுக்கு, சாதாரண மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்பது ரஜினியின் கருத்தாக உள்ளது. மேலும் அடிக்கடி நடக்கும் ரைடுகளும், அவரை யோசிக்க வைத்துள்ளது.
ரஜினி, தமது கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்த்து விட கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே, கார்த்திக் சிதம்பரத்தின் வீட்டில் நடைபெற்ற சோதனை என்று சொல்லப்படுகிறது.

அத்துடன், ரஜினி தமிழர் அல்ல என்கிற பிரச்சாரத்தை பல கட்சிகள் முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில், பாஜக ஆதரவு என்பது, தம்மை பெரிய அளவில் பாதிக்கும் என்ற எண்ணமும் அவருக்கு இருக்கிறது.
இதை எல்லாம் கவனத்தில் கொண்டே, ரஜினி பாஜகவை தவிர்த்து விட்டு, தனி கட்சி என்ற முடிவுக்கு வந்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
