Asianet News TamilAsianet News Tamil

ஆடியோவில் "தாத்தா" என ஏன் சொன்னேன் தெரியுமா..? நிர்மலா தேவி பகீர்..!

why nirmala devi used the name thatha
why nirmala devi used  the name " thatha".?
Author
First Published May 10, 2018, 5:10 PM IST


 நிர்மலா  தேவி கல்லூரி மாணவிகளை தவறான  நோக்கத்தோடு அழைத்த வழக்கில் 5 நாட்கள்  சிபிசிஐடி விசாரணை, 6 மணி  நேரம் சந்தானம் விசாரணையை ஹாயாக எதிர்கொண்டு மதுரை  மத்திய சிறை சாலையில் அடைப்பட்டு கிடக்கிறார் பேராசிரியர்  நிர்மலா தேவி.

நிர்மலா தேவி விவகாரத்தில் முன்னால் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் உதவி பேராசிரியர் முருகன் பேரும் அடிபட்டது. அதனை தொடர்ந்து இவர்கள் இருவரிடமும் பாய்ந்தது விசாரணை..

இந்த விசாரணையில் எனக்கு ஒன்றும் தெரியாது... எனக்கு ஊரு திருச்சுழி,  நிர்மலா தேவிக்கு  அருப்புக் கோட்டை..அதாவது எங்க ரெண்டு பேரு ஊரும் கொஞ்சம் பக்கம் தான்...முதன் முதல்  நிர்மலா தேவியை எனக்கு அறிமுகம்  செய்து வைத்தவர் இயக்குனர் கலைச்செல்வன் தான் என  தெரிவித்து உள்ளார் கருப்பசாமி

why nirmala devi used  the name " thatha".?

அதே சமயத்தில், மேலிடத்திற்கு மாணவிகள் தேவைப்படுகிறது என நிர்மலா தேவியிடம் சொன்னவர்கள் இவர்கள் இருவர் தான் என நிர்மலா தேவி சொல்லி இருக்கிறார்.

சரி இதெல்லாம் பெரிய கதையாக போய் கொண்டே இருக்கிறது. ஆனால் நிர்மலா தேவி பேசி வெளியான ஆடியோவில் சொன்ன தாத்தா யாரு ..? ஏன் தாத்தா என அவர் குறிபிட்டு பேசியுள்ளார் என பிரபல நாளிதழில் வெளிவந்துள்ளது  

why nirmala devi used  the name " thatha".?

தாத்தா என்று ஏன் சொன்னேன் தெரியுமா ..?  நிர்மலா தேவி விளக்கம்

சென்னை வரையிலான என்னுடைய  தொடர்புகளை அறிந்து தான், மதுரை காமராஜர் பல்கலை  கழகத்திற்கு கவர்னர் வந்தபோது, அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட முக்கிய விருந்தினர்களுக்கு  உபசரிக்க என்னை பயன்படுத்தினார்கள்.

why nirmala devi used  the name " thatha".?

அதனால் தான் என்னால்,அந்த நிகழ்ச்சியில் அனைவரிடமும் எளிதில் பேச முடிந்தது, ஏன் கவர்னருடன் கூட நான் இரண்டு மூன்று செல்பி எடுக்க முடிந்தது என தெரிவித்து உள்ளதாகவும்,

why nirmala devi used  the name " thatha".?

முருகனும் கருப்ப சாமியும் தான், ராஜ் பவன் வட்டாரத்தில் உள்ள  உள்ள முக்கியமான ஒருவருக்கு  கல்லூரி மாணவிகள் தேவைப்படுகிறார்கள் ஏற்பாடு செய்ய வேண்டியது உன் பொறுப்பு என  நச்சரித்தார்கள் என தெரிவித்து உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது

அடுத்ததாக, முருகன் தான் என்னிடம்,கவர்னரை தாத்தா என்று நினைக்காதே...வயது அதிகமானாலும் சோர்வில்லாமல் கடினமாக உழைக்க கூடியவர் என்று சொன்னார் என கூறி உள்ளாராம் நிர்மலா தேவி ...

why nirmala devi used  the name " thatha".?

அவர் சொன்னதை தான்,நான் மாணவிகளிடம் பேசும் போது சொன்னேன் என நடந்ததை அப்படியே சொல்லி இருக்கிறார் நிர்மலா தேவி...

மேலும், இவ்வாறு செய்வதால், பிற்காலத்தில் ஏனோ கன்ட்ரோலராகவோ அல்லது  பதிவாளராகவோ ஆக்கி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் நான் மாணவிகளிடம் அப்படி பேசினேன் என ஒன்றும் அறியாதவரை நிர்மலா தேவி பேசி உள்ளார்

அதே வேளையில், ராஜ் பவனில் உள்ள முக்கிய நபருக்கு கல்லூரி மாணவிகள் தேவைப்படுகிறது என சொன்னதாக தான் நிர்மலா தேவி முதலில் குறிப்பிட்டு இருந்தார்.

பின்னர் முருகன், தாத்தா என்ற வார்த்தையை பயன்படுத்தி விளக்கம் அளித்ததாக  குறிப்பிட்டு  உள்ளார்

ஆக மொத்தத்தில், இந்த இடத்தில யார் அந்த தாத்தா என்பது  இன்னும் புரியாத புதிராக உள்ளது...

அதே போன்று கவர்னர் என்ற வார்த்தையை பொதுவாக பயன்படுத்துவதால்.. யாரை குறி வைத்து  இவ்வாறு பேசி உள்ளனர் என்றும் எல்லாமே ஒரு சந்தேகப் பார்வையில் சென்று கொண்டிருக்கிறது.

   

Follow Us:
Download App:
  • android
  • ios