சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் உருக்காலையை தனியார் மயம் ஆக்குவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திதர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சேலம் உருக்காலையில் 2000க்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். இதனை தனியார் மயமாக்கினால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
உருக்காலையில் ஏற்படும் நஷ்டத்தின் காரணங்களை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை காண வேண்டும். தனியார் மயமாக்குவதை நிறுத்தி, மீண்டும் அரசே நடத்துவதற்கான பணிகளை பரிசீலனை செய்ய வேண்டும்.
உருக்காலையை மீண்டும் செயல்படுத்த ரூ.2005 கோடி நிதியை அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனவே, எக்காரணம் கொண்டும் சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க கூடாது. அவ்வாறு செய்தால் மக்களிடம் பதற்றம் உருவாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.