உங்க நிலைமையை நினைச்சா பாவமாக இருக்குங்க ஓவியா,எப்படியோ நல்லவிதமாக களவாணிக்கு பிறகு வரவேண்டிய நீங்க இப்படி வந்து நிக்கறீங்களே

பிரதமர் மோடி சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ஓவியா டுவீட் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி நாளை ஒரு நாள் சுற்றுப்பயணமாக சென்னை வருகிறார். காலை 10.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் நரேந்திர மோடி, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகிறார்.

பிரதமரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் பிரதமரின் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி சிலர் டுவீட் செய்து வருகின்றனர். அந்தவகையில் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஓவியா கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக்கில் டுவீட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'’200ரூ கூட இல்லாமலா இந்த வேலைக்கு வந்துட்டீங்க, உங்க நிலைமையை நினைச்சா பாவமாக இருக்குங்க ஓவியா,எப்படியோ நல்லவிதமாக களவாணிக்கு பிறகு வரவேண்டிய நீங்க இப்படி வந்து நிக்கறீங்களே, உங்க முடிவுகளை மீண்டும் மீண்டும் பல முறை யோசிச்சு செயல்படுத்துங்க,வடிவேலு நியாபகம் இருக்குல்ல’’ என்கிற வகையில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Scroll to load tweet…