கர்நாடகா ஊழல் விவகாரத்தில் சித்தராமையாவுக்கு பதில் எடியூரப்பா என பெயரை வாய் தவறி கூறி விட்டதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் நான் தவறாக பேசியிருந்தாலும் மக்கள் அதை சரியாக புரிந்துகொண்டு தேர்தலில் தவறு செய்ய மாட்டார்கள் என தெரிவித்தார். 

கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து அப்பகுதியில் தேசியத் தலைவர்களின் அரசியல் சுற்றுப் பயணங்கள் சூடுபிடித்துள்ளது. 

இதில் கடந்த சில நாட்களாக பாரதிய ஜனதா தேசியத்தலைவர் அமித்ஷா கர்நாடகாவில் முகாமிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேட்டியளித்தார். அப்போது, ஊழல் மலிந்த அரசுகளுக்கு போட்டி வைத்தால், எடியூரப்பா அரசுதான் முதலிடம் பிடிக்கும் என உளறினார். 

இதுகுறித்து இன்று அமித்ஷா விளக்கம் அளித்தார். அப்போது, கர்நாடகா ஊழல் விவகாரத்தில் சித்தராமையாவுக்கு பதில் எடியூரப்பா என பெயரை வாய் தவறி கூறி விட்டதாகவும் நான் தவறாக பேசியிருந்தாலும் மக்கள் அதை சரியாக புரிந்துகொண்டு தேர்தலில் தவறு செய்ய மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.