கேரளாவில் தமிழ் பெண்ணை 60 துண்டா வெட்டி போட்டாங்களே, எங்க போனீங்க.? திமுகவை துவம்சம் செய்த அர்ஜூன் சம்பத்.
தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணை கேரளாவில் நரபலி கொடுத்து 60 துண்டுகளாக வெட்டிப் போட்ட சம்பவத்தை ஏன் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணை கேரளாவில் நரபலி கொடுத்து 60 துண்டுகளாக வெட்டிப் போட்ட சம்பவத்தை ஏன் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார். திணிக்க படாத இந்திக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டம் வெறும் மக்களை திசை திருப்பும் செயல் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. இபிஎஸ் மீது வழக்குப்பதிவா? அமைச்சர் ரகுபதி சொன்ன பரபரப்பு தகவல்.!
சமீபத்தில் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில், தமிழகத்தைச் சேர்ந்த பெண் உட்பட இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இச்சம்பவம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து கேரள மாநிலத்தில் தங்கி பிழைப்பு நடத்தி வந்த தமிழர்கள் பலரும் அச்சத்தின் காரணமாக சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் இந்த சம்பவத்தைக் குறித்து திமுகவோ, அதன் கூட்டணி கட்சிகளோ வாய்திறக்கவில்லை என்ற குற்றச்சாட்டை இந்து மக்கள் கட்சி முன்வைத்துள்ளது.
இதையும் படியுங்கள்: தமிழக மீனவர் சுடப்பட்ட விவகாரம்… வாய் திறக்காத வானதி சீனிவாசன்!!
இதுகுறித்து அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இல்லாத சொல்லாத ஒன்றை இந்தி திணிப்பு என கூறி போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழகத்தில் ஈவேரா பிறந்தநாளை சமூக நீதி நாளாக கொண்டாடுகின்றனர். அப்படியே திமுகவினர் அதை கொண்டாடிய போது தான் தென்காசி அருகே பட்டியலிட மக்கள் வாழும் ஊரையே ஒதுக்கி வைத்திருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு கடையில் தின்பண்டங்கள் கூட தரமுடியாது என மறுக்கப்பட்டுள்ளது. இதற்கான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது.
கேரளாவில் ஒரு தமிழ் பெண் உட்பட 2 பெண்கள் நரபலி என்ற பெயரில் 60 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இதுவரை திமுகவோ அதன் கூட்டணி கட்சிகளோ இது குறித்து வாய் திறக்கவில்லை. இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்திவருகின்றனர். சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர். இது அனைத்தும் வெறும் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக தான் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.