அங்கே இருந்த குறவர்கள், இருளர்களுக்கு பாதுகாப்பாக இருந்ததே வன்னியர்கள் தானே. அவர்கள் தானே போராடி இருக்கிறார்கள். 

அக்கினி கலச முத்திரையை வைக்காமல் இருந்திருந்தால் ஒரு பிரச்னையும் இல்லை. அது வன்னியர் சங்கத்தினுடைய அடையாளம். அதை ஏன் வைக்க வேண்டும். நிஜ செங்கோணிக்காக போராடிய கோவிந்தன் இன்னும் உயிருடன் இருக்கிறார். அவர் கம்யூனிஸ்ட். அவரை ஏன் நீங்கள் படத்தில் காட்டவில்லை. அங்கே இருந்த குறவர்கள், இருளர்களுக்கு பாதுகாப்பாக இருந்ததே வன்னியர்கள் தானே. அவர்கள் தானே போராடி இருக்கிறார்கள். அப்படியானால் அவர்களை ஏன் நீங்கள் தவறாக காட்ட வேண்டும்? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் தெரிவித்து இருந்தார்.

இதற்கு எதிராக பலரும் கருத்துக்கூறி சாதிசாக்கடை_சீமான் என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். ‘’ விசிக வன்னியரசு, திரெள்பதி, ருத்ர தாண்டவம் படங்களில் தலித்துகளை இழிவுபடுத்தும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம் என சொல்ல துணிச்சல் இல்லாமல் அக்கினிசட்டிக்கு மட்டும் பொங்குவது என்ன உளவியல்? எனக் கேட்டுள்ளார். 

தமிழர்களுக்கு சாதி இல்லை என்பார் சீமான். ஆனால் தோழர் கோவிந்தன் வன்னியர் என்பார்.

அவர் சாதிச் சங்கத்தோட தலைவர்! பின்னே அவர் எப்படி பேசுவாருன்னு அப்பாவியா கேட்டுட்டு, அடுத்த நொடியில் கன்னியாகுமரியில் எங்கண்ணன் குரு பேசனதாலேயா இங்கே கொலை நடக்குது என பேசுகிறார் ஒரு கட்சித் தலைவரான சீமான்! இவரது கோட்பாட்டுக்கு எதிரி இவர் வாய் மட்டுமே! பச்சை அயோக்கியத்தனம் என்பது யாதெனில், கொலைகாரனை விட்டுவிட்டு கேள்வி கேட்பவனை குறை சொல்வது’’ என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…