Asianet News TamilAsianet News Tamil

#UnmaskingChina: சீனா- இந்தியா விவகாரத்தில் உண்மையை மறைக்கிறார் பிரதமர்... கேள்விகளால் துளைக்கும் ப.சிதம்பரம்!

சீனா- இந்தியாவுக்கு எதற்காக மோதல்? எதற்காக சண்டை? எதற்காக ராணுவ தளபதிகள் இடையே பேச்சுவார்த்தை? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

Why China-India conflict? P. Chidambaram pierces PM Modi with questions
Author
India, First Published Jun 20, 2020, 10:17 AM IST

சீனா- இந்தியாவுக்கு எதற்காக மோதல்? எதற்காக சண்டை? எதற்காக ராணுவ தளபதிகள் இடையே பேச்சுவார்த்தை? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

Why China-India conflict? P. Chidambaram pierces PM Modi with questions

கல்வான் பள்ளத்தாக்கில் சீன- இந்திய துருப்புகளுக்கு இடையே மோதல் வெடித்த நிலையில், ‘’ஊஹான் மற்றும் மகாபலிபுரத்தில் நெருங்கிய நட்பு மலர்ந்ததாகப் பெருமைப்பட்டுக் கொண்டீர்களே, சீன அதிபர் ஜீ தங்களை ஏமாற்றிவிட்டார் என்பதை இப்பொழுது உணர்கிறீர்களா? “கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்குச் சொந்தம்” என்று சீனா அந்தப் பகுதியில் காலூன்றி விட்டதே, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? இருபது ஜவான்கள் மரணம், 85 பேர் காயம், 10 பேர் சிறைபிடிப்பு, இதற்குப் பிறகு தான் தங்கள் மௌனம் கலைந்தது, இது ஜனநாயக முறைக்கு உகந்ததா? ஏழு வாரங்கள் தாங்கள் (பிரதமர்) மௌனம் காத்தீர்கள், ஏன்? ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்ற மௌனம் நியாயமா?’’ எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

Why China-India conflict? P. Chidambaram pierces PM Modi with questions

இந்நிலையில் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’சீன துருப்புகள் எல்லையத் தாண்டி இந்திய நிலப்பகுதியில் நுழையவில்லை என்று பிரதமர் திரு மோடி கூறியுள்ளார்.  அப்படியென்றால், எதற்காக மோதல்? எதற்காக சண்டை? எதற்காக ராணுவ தளபதிகள் இடையே பேச்சுவார்த்தை? எதற்காக வெளியுறவுத் துறை அமைச்சரின் அறிக்கை? இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டார்களே, அது எங்கே நடந்தது? இந்திய நிலப்பகுதியிலா அல்லது சீன நிலப்பகுதியிலா?’’என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios