Asianet News TamilAsianet News Tamil

அதிமுக -தேமுதிக இழுபறிக்கு இதுதான் காரணமா..? உண்மையை போட்டுடைத்த அமைச்சர் ஜெயக்குமார்..!

அதிமுக கூட்டணியில் தேமுதிக உடன்பாட்டில் இழுபறி நீடிப்பதற்கான காரணத்தை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கியுள்ளார். 
 

Why  ADMK coalition DMDK problem Minister Jayakumar
Author
Tamil Nadu, First Published Mar 4, 2019, 11:19 AM IST

அதிமுக கூட்டணியில் தேமுதிக உடன்பாட்டில் இழுபறி நீடிப்பதற்கான காரணத்தை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கியுள்ளார். 

மக்களவை தேர்தலுக்கு தயாராகி வரும் அதிமுக பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகிறது. அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் ஜெயகுமார், ‘’ அதிமுக தான் முதலில் கூட்டணியை அமைத்தது. கூட்டணிக்கு தேமுதிக வருவதில் விரைவில் நல்ல முடிவு வரும். எல்லாம் சுமுகமாக, சுபமாக முடியும். எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது இன்றோ நாளையோ முடிவாகி விடும். Why  ADMK coalition DMDK problem Minister Jayakumar

மக்களவை தேர்தலில் அதிமுக அமைத்த கூட்டணி நிறைவு பெற பேச்சுவார்த்தை, சுமூகமாக அளவில் நடைபெற்று மெகா கூட்டணி முழுமையான அளவுக்கு அமைக்கப் பெற்றுள்ளது. இதனால் எதிரிகள் தூக்கம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழக மக்கள் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோக ஆதரவு தந்து, 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றியை தேடி தருவார்கள். தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் போர்க்கால அடிப்படையில் தேர்தலுக்கான பல பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஜெயலலிதா இருந்தபோது சென்ற வேகத்திலேயே அதிமுக தற்போதும் பயணிக்கிறது. ‘சூப்பர் ஜெட்’ வேகத்தில் செல்வதால் அனைத்திலும் அதிமுக கூட்டணி தான் முந்தும்.Why  ADMK coalition DMDK problem Minister Jayakumar

அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகள் ஜெயலலிதாவால் விமர்சனம் செய்யப்பட்டு, கூட்டணியில் இருந்து வெளியேறியவை. மீண்டும் அந்த கட்சிகள் கூட்டணியில் இணைவதால் முரண்பாடு இருக்கும் என்று மக்கள் கருதவில்லை. 

Why  ADMK coalition DMDK problem Minister Jayakumar

எங்களை கழுத்தை நெரித்து பாஜக., கூட்டணிக்கு உடன்பட்டதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். அதிமுக யானை பலம் கொண்ட கட்சி. எங்களுடைய கழுத்தை யாரும் நெரிக்க முடியாது. கழுத்தை, தும்பிக்கையை தொட்டால் யானை தூக்கி அடித்துவிடும். ஆனால் திமுக கூட்டணியில் உள்ளவர்கள் கோழியின் கழுத்தை தான் திருக முடியும். ஆட்டை குளிப்பாட்டி, குங்குமம், மஞ்சள் பூசி கோவிலில் பலியிடுவார்கள். அதுபோல முத்தரசன் மற்றும் சில கட்சிகளும் தி.மு.க.வுடன் சேர்ந்து பலி கிடா ஆகிவிட்டார்கள் என்பதை நினைக்கும்போதுதான் பரிதாபமாக இருக்கிறது’’ என அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios